November 06, 2017

இந்து தீவிரவாதம் குறித்து பேசிய, கமல்ஹாசனை சுட்டுக்கொல்லுங்கள்

இந்துத் தீவிரவாதம் இல்லை என்று இனி யாரும் சொல்ல முடியாது என நடிகர் கமல்ஹாசன் பேசியிருக்கிறார்.

சமூக பிரச்னைகளைக் கையிலெடுத்து, தீவிர அரசியலை நோக்கி பயணித்து கொண்டிருக்கும் கமல், வார இதழ் ஒன்றில் தொடர்ந்து எழுதி வருகிறார். இந்த வாரம், அவர் எழுதியுள்ள கட்டுரையில், ஏற்கனவே அவர் டுவிட்டரில் பதிவிட்ட கொசஸ்தலை ஆற்றில் கொட்டப்படும் கழிவுகள்; எண்ணூர் கழிமுக ஆக்கிரமிப்பு விஷயங்கள், அதன் ஆபத்துகளை விரிவாக பேசியிருக்கிறார். 

அதோடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழகத்தில் இந்துத்துவ சக்திகள் மெதுவாக ஊடுருவுவது பற்றி கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு கமல் அளித்த பதில்: 

கலாசாரம், பண்டிகை, இறை வழிபாடு, இசை, கலை என்று பல வழிகளிலும் பழமையைப் பரப்ப முற்படுகின்றனர். மற்ற மதங்களில் உள்ள வலதுசாரிகளும் பதிலுக்கு எதிர்வாதம் செய்யவும் எதிர்வினை ஆற்றவும் கிளம்புகிறார்கள். இது தமிழகத்தில் மட்டுமல்ல, நாடு தழுவிய ஒரு சீரழிவு.

ஒரு தலைமுறையே சாதிய வித்தியாசங்கள் தெரியாமல் வளர்ந்து வரும் வேளையில், பழைமைவாதிகள் புகுந்து சாதி வித்தியாசங்களைப் போதிக்கத் தொடங்கிவிட்டார்கள். அதன் பிரதிபலிப்பாக இணையதளத்தில் சினிமாக் கலைஞர்களைச் சாதிவாரியாகப் பிரித்துப் பட்டியலிடும் வேலைகள் பகிரங்கமாக நடக்கின்றன.

முன்பெல்லாம், இத்தகைய இந்து வலதுசாரியினர் வன்முறையில் ஈடுபடாமல், வாதப் பிரதிவாதங்கள் மூலமே எதிராளியை கையாண்டனர். இப்போது அது ஒத்து வராததால் அவர்களும் வன்முறையில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர். 

'எங்கே ஓர் இந்துத் தீவிரவாதியைக் காட்டுங்கள்?' என்ற சவாலை இனி அவர்கள் விட முடியாது. அந்த அளவுக்கு அவர்கள் கூட்டத்திலும் தீவிரவாதம் பரவியிருக்கிறது. 

வாய்மை வெல்லும் என்ற நம்பிக்கை போய், வலிமை வெல்லும் என்ற நம்பிக்கை, நம்மை காட்டுமிராண்டிகள் ஆக்கிவிடும். இருந்தாலும், தமிழகம் சமூகச் சீர்திருத்தத்திற்கு முன்னுதாரணம் ஆகும் நாள் தொலைவில் இல்லை. இன்றைய நிலையில் அந்த முன்னுதாரணமாய் கேரளம் திகழ்கிறது. அதற்கு வாழ்த்துகள். இவ்வாறு கமல் தெரிவித்திருக்கிறார். 

2

இந்து தீவிரவாதம் குறித்து பேசிய நடிகர் கமல்ஹாசனை சுட்டுக்கொல்ல வேண்டும்‘ என அகில பாரத இந்துமகாசபா தலைவர் தெரிவித்துள்ளார்.

வார இதழ் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டியளித்த நடிகர் கமல், இந்து தீவிரவாதம் இல்லை என இனி யாரும் சொல்ல முடியாது என கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது,

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அகில பாரத இந்து மகா சபா தலைவர் நடிகர் கமலஹாசனை சுட்டுக்கொல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இந்து மகா சபா தலைவர் கூறுகையில்,’கமல் ஹாசன் போன்றவர்கள் சுட்டுக் கொல்ல வேண்டும், இது மற்றவர்களுக்கு நல்ல பாடமாக இருக்கும். இந்துக்கள் மற்றும் மதத்தை அவமதிப்பவர்களை மன்னிக்க கூடாது” என்றார். இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 கருத்துரைகள்:

கமல் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். ஆனால் புதிய அரசியல்வாதியல்லவா. மறுப்பறிக்கையும் வரும்.

Racism in any form from any group should be condemned as we also have equal rights to live in any part of the world in peace and harmony. Therefore people from various field and prominence should stand up and loudly say with the slogans of "LET US LIVE IN PEACE AND LET OTHERS ALSO TO LIVE IN PEACE"

Post a Comment