Header Ads



பொலிஸ் அறிக்கை பெற, கட்­ட­ணங்கள் உயர்வடைந்தன

வெளி­நா­டு­க­ளுக்கு தொழில் வாய்ப்பு பெற்றுச் செல்வோர் உட் பட பலரும் பொலி­ஸா­ரிடம் இருந்து பெற்­றுக்­கொள்ளும் அனு­மதி அறிக்­கைக்கு செலுத்­தப்­படும் கட்­ட­ணத்தில் திருத்தம் செய்­யப்­பட்­டுள்­ளது. திறை­சேரி செய­ல­ாளரின் அனு­ம­திக்கு அமைய இந்த திருத்­தங்கள் முன்­னெ­டுக்கப்பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சகர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

எதிர்­வரும் 5 ஆம் திகதி முதல் இந்த புதிய கட்­டண திருத்­தங் கள் அமுலுக்கு வரு­வ­தா­கவும், அதில் தபால் செலவும் உள்­ள­டக்­கப்பட்­டுள்­ள­தா­கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்­படி பொலிஸ் அனு­மதி அறிக்­கைக்­காக விண்­ணப்­பிப் போர், இலங்­கையிலிருந்து விண்­ணப்­பித்து இலங்கை முக­வரிக்கு அவ்­வ­றிக்­கை­யைப் பெற்­றுக்­கொள்ள 1000 ரூபாவும், இலங்­கை யிலிருந்து விண்­ணப்­பித்து வெளி­நாட்டு முக­வரி ஒன்­றுக்கு அந்த அறிக்கையை தபால் ஊடாக பெற்­றுக்­கொள்ள 1500 ரூபாவும், இலங்கையிலிருந்தோ அல்லது வெளி­நாட்டிலிருந்தோ இணை யம் ஊடாக அவ்வறிக்கையைப் பெற்றுக்கொள்ள 1500 ரூபாவும் அறவிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.