Header Ads



மது போதையில், பௌத்த தேரர் கைது - தகாத வார்த்­தை­களால் தூற்றிய நிலையில் சம்பவம்

மது போதையில் சிலாபம் பஸ் தரிப்பு நிலை­யத்தில் முறை­கே­டாக நடந்து கொண்ட பௌத்த தேரர் ஒரு­வரைக் கைது செய்­துள்­ள­தாக சிலாபம் பொலிஸார் தெரி­வித்­தனர்.

இரவு நேர ரோந்து நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டி­ருந்த பொலிஸ் அதி­கா­ரி­க­ளுக்கு குறித்த தேரர் தொடர்பில் தகவல் கிடைத்­ததைத் தொடர்ந்து பஸ் நிலையம் சென்ற பொலிஸார் அங்கு தகாத வார்த்­தை­களால் குறித்த தேரர் யாரையோ தூற்றிக் கொண்­டி­ருந்­த­தா­க­வும், அந்­நேரம் அவர் அதிக போதையில் இருந்­தமை தெரிய வந்­த­தோடு அவ­ரிடம் மேற்­கொண்ட விசா­ர­ணை­க­ளுக்­கு­ரிய பதிலை வழங்­கா­ததால் அவர் கைது செய்­யப்­பட்டு பொலிஸ் நிலை­யத்­துக்கு அழைத்துச் செல்­லப்­பட்­டுள்ளார்.

குறித்த தேரரின் விப­ரங்­களை அறிந்து கொள்­வ­தற்­காக அவ­ரிடம் கேட்­கப்­பட்ட கேள்­வி­க­ளுக்கு அவரால் பதி­ல­ளிக்க முடி­ய­வில்லை என்றும் அவர் வசிக்கும் பௌத்த விகாரை தொடர்­பான தக­வல்­க­ளையும் கூட அவரால் தெரி­விக்க முடி­ய­வில்லை என்றும் அவ­ரிடம் தேரர்­க­ளுக்­கான அடை­யாள அட்­டையோ அல்­லது தேசிய அடை­யாள அட்­டையோ இருக்­க­வில்லை என்றும் பொலிஸார் தெரி­வித்­தனர்.

குறித்த தேரர் நிக்­க­வெ­ரட்டி அவு­லே­கம பிர­தே­சத்தைச் சேர்ந்த ஒரு­வ­ராக இருக்­கலாம் என சந்­தே­கிக்­கப்­ப­டு­வ­தோடு அவர் தொடர்பில் சந்­தேகம் ஏற்­பட்­டுள்­ளதால் அவ­ரது கைவிரல் அடையாளங்களைப் பெற்றுக் கொண்டு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.