Header Ads



புலிகளின் எச்சங்கள், இன­வா­தத்­தீயை மூட்­ட சதி - பாராளுமன்றத்தில் ஹரீஸ் தெரிவிப்பு

புலிகள் விட்டுச் சென்ற எச்சங்களாக காணப்படும் சில தமிழ் அரசியல்வாதிகள் கல்­மு­னைத்­ தா­ய­கத்தின் வர­லாற்­றினைத் திரி­பு­ப­டுத்தி இன­வா­தத்­தீயை மூட்­டு­வ­தற்கு முயல்­வ­தாக  குற்றம் சாட்­டிய பிர­தி­ய­மைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், தமிழ், முஸ்லிம்­களின் ஒற்­று­மையை சீர்­கு­லைப்­ப­தற்கு இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்லை என்றும் உறுதி­படத் தெரிவித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை 2018ஆம் ஆண்­டுக்­கான வரவு செல­வுத்­திட்­டத்தின் மீதான நான்காம் நாள் விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­றும்­போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், 

தற்­போது அம்­பாறை மாவட்­டத்தின் இத­ய­மான கல்­முனைத் தாயக பிர­தே­சத்தில் ஏற்­பட்­டுள்ள அசா­தா­ரண சூழ்­நி­லை­களால் பதற்­ற­மான நிலை­மை­யொன்று நீடிக்­கின்­றது. இரு சமூகங்­க­ளி­டையே அமை­தி­யற்ற நிலை­மை­யொன்று ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. 

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கோடீஸ்­வரன் மற்றும் கல்­முனை நக­ர­ச­பையின் முன்னாள் எதிர்க்­கட்சித் தலைவர் ஏகாம்­பரம் ஆகியோர் வர­லாற்றைத் திரி­பு­ப­டுத்தி வெளி­யிடும் கருத்­துக்­களால்  மக்கள் மத்­தியில் குரோ­தத்­தினை ஏற்­ப­டுத்­து­கின்­றனர். இவர்கள் முஸ்லிம் தலை­வர்கள் தொடர்­பாக  முழுக்க முழுக்க தவ­றான கருத்­தையும், முஸ்லிம் மக்கள் பற்றி பிழை­யான சிந்­த­னையை ஏற்­ப­டுத்தும் வகை­யி­லான கருத்­துக்­க­ளையும் பரப்பி வரு­கின்­றனர். 

இது உண்­மை­யி­லேயே தவ­றா­ன­தாகும். தாய­க­மான கல்­மு­னையின் வர­லாற்­றினை எடுத்­துக்­கொண்டால் 1892 ஆம் ஆண்டு ஆங்­கி­லேயர் ஆட்சிக் காலத்தில் 18 ஆம் இலக்க பட்­டி­ன சபைகள் சட்­டத்தின் படி புதிய உள்­ளூ­ராட்சி சபைகள் உரு­வாக்­கப்­பட்­ட­ன. 1897 ஆம் ஆண்டு இரண்டாம் மாதம் 19ஆம் திகதி அன்­றி­ருந்த ஆளுநர் சேர் ரிஜ்­வே­யினால் கல்­முனை பட்­டி­ன சபை­யாக வர்த்­த­மானி மூலம் அறி­விக்­கப்­பட்­டது. இதன் எல்­லை­க­ளாக வடக்கில் நற்­பிட்­டி­முனை வீதியின் கடற்­க­ரை­நோக்­கியும், தெற்கே சாய்ந்த மருது கிரா­மத்தின் எல்­லையும் மேற்கே வயலும், கிழக்கே கடலும் இருந்­தன.

1947 ஆம் ஆண்டு பட்­டி­ன­ச­பைகள் சட்­டத்தின் படி­யாக கல்­முனை பட்­டின சபை­யாக தர­மு­யர்த்­தப்­பட்டு 7 வட்­டா­ரங்கள் உரு­வாக்­கப்­பட்­டன. 2 வட்­டா­ரங்கள் தமிழ் மக்­க­ளுக்­கா­கவும், 5 வட்­டா­ரங்கள் முஸ்­லிம்­க­ளுக்­கு­மாக ஒதுக்­கப்­பட்­டன. இந்தப் பிர­தே­சத்தில் அன்­றைய தேர்­தலில் 5 முஸ்லிம் உறுப்­பி­னர்­களும், 2 தமிழ் உறுப்­பி­னர்­களும் தெரி­வா­கி­னார்கள்.

இத்­த­கைய வரலாற்றைக் கொண்­டி­ருக்கும் கல்­மு­னையில் 75 சத­வீ­தத்தைக் கொண்­டுள்ள முஸ்­லிம்­க­ளுக்கும் மிகுதி தமிழர்களுக்குமாக நான்கு சபைகள் உரு­வாக்­கப்­பட வேண்டும். பிரிட்­டி­ஷாரின் காலத்தில் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்ள எல்­லை­களைக் கொண்­ட­தா­கவே  இவை அமைக்­கப்­பட வேண்டும் என்­பதே எமது நிலைப்­பா­டகும். இதுவே யதார்த்த பூர்­வ­மான நியா­ய­மு­மாகும். 

இத்­த­கைய நிலையில் தற்­போது இந்த வர­லா­று­க­ளை­யெல்லாம் திரி­பு­ப­டுத்தி  கல்­மு­னையில், அம்­பாறை மாவ­ட்டத்தில் சகோ­த­ரத்­து­வத்­துடன் வாழும் தமிழ், முஸ்லிம் ஒற்­று­மையை குலைப்­ப­தற்கு சில தமிழ் தலை­மைகள் கடு­மை­யான முயற்­சி­களை எடுக்­கின்­றன. இரு சமூகங்­க­ளுக்­குள்ளும் இன­வாத தீயினை மூட்­டு­கின்­றார்கள். 

குறிப்­பாக முஸ்லிம் ஆட்­சி­யா­ளர்கள் வலுக்­கட்­டா­ய­மாக செயற்­பட்­ட­தாக பிழை­யான தக­வல்கள் மக்கள் மத்­தியில் கூறப்­ப­டு­கின்­றன. விடு­தலைப் புலிகள் நாட்டை குட்­டிச்­சு­வ­ராக்­கிட்டுச் சென்­றனர். தற்­போது அவர்கள் விட்டுச் சென்ற எச்­சங்கள் கல்­மு­னையில் சமூ­கங்­க­ளுக்­கி­டை­யி­லான  ஒற்­று­மையைக் குலைத்து சமூ­கங்­க­ளுக்­கி­டையில் பிள­வினை ஏற்­ப­டுத்தும் முயற்­சியில் இன­வாதத் தீயினை மூட்­டு­வ­தற்கு முயற்­சிக்­கின்­றார்கள். 

இவர்கள் ஒரு விட­யத்­தினை புரிந்து கொள்ள வேண்டும். கொழும்பு வெள்­ள­வத்­தையில் வசிக்கும் தமி­ழர்கள் கொழும்பில் வசிப்­ப­தாகக் கூறு­கின்­ற­போதும், கல்­மு­னையில் வாழும் முஸ்­லிம்கள் கல்­முனை என்று கூற­மு­டி­யா­துள்­ளது. கல்­முனை முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மா­னது அல்ல. அவர்­க­ளுக்கு கல்­மு­னைக்­கு­டியே சொந்­த­மா­னது என்று கூறு­கின்­றார்கள். இந்த நிலை­மையை யார் ஏற்­ப­டுத்­து­கின்­றார்கள். எதற்கு ஏற்­ப­டுத்­து­கின்­றார்கள் என்­பதை புரிந்து கொள்­ள­வேண்டும் என்றார்.

இச்­ச­ம­யத்தில் அக்­கி­ர­ா­ச­னத்தில் இருந்து முஜிபுர் ரஹ்மான் எம்.பி இத்­த­கைய செயற்­ப­ாடு­களை யார் முன்­னெ­டுக்­கின்­றார்கள் என்று கேள்­வி­யெ­ழுப்­பி­ய­போது, 

சில தமிழ் அர­சி­ய­ல்­வா­தி­களே என பதிலளித்த பிரதியமைச்சர், கல்முனை தொடர்பில் முஸ்லிம்களின் கோரிக்கைகள் நியாயமானவை. அவற்றை நிறைவேற்றிக்கொடுக்க வேண்டும். கல்முனையை செதுக்குவதில், எம்.எஸ், காரியப்பர், ஏ.சி.ஹமீட், மன்சூர், அஷ்ரப், போன்ற தலைவர்கள் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டுள்ளார்கள். 

அந்தவழியில் நானும் எனது பங்களிப்பினை செய்வேன். வட, கிழக்கில் சமஷ்டியை கோரும் தரப்பினர் கல்முனையில் இரு சமூகங்களுக்கிடையிலான விரிசலை ஏற்படுத்த முயலக்கூடாது. அதற்கு நான் ஒருபோதும் இடமளிக்கப்போவதும் இல்லை என்றார்.

-விடிவெள்ளி-

8 comments:

  1. கோடீஸ்உவரன் MP சொன்னது 100% உண்மை.
    உண்மையை சொன்னால் புலிகளா?

    இனவாதம் தூண்டுவது NE இணைப்பை எதிர்கும் ISIS முஸ்லிம் ஆதரவாளர்கள் மட்டுமே.

    ReplyDelete
  2. வட, கிழக்கு இணைப்பைக் கூறுவதே இனவாதம்தான்.

    தமிழ்ப் பயங்கரவாதிகளின் எச்சங்கள்தான், இப்படியான அர்த்தமற்ற இணைப்பைக் கோருகிறார்கள்.

    பிரதர் ஹரீஸ் சொன்னாலும், சொல்லாவிட்டாலும் இதுதான் உண்மை.

    இணைப்பு என்பது வெறும் கானல் நீர்.

    ReplyDelete
  3. இனவாதி கோடீஸ்வரன் ஒரு புலி பயங்கரவாதி. அனைத்தையும் மாற்றி தமிழ் ஈழம் உருவாக்க பார்க்கின்றான்.

    ReplyDelete
    Replies
    1. என்று ISIS முஸ்லிம் பயங்கரவாதியான Gt x கண்டுபிடித்துள்ளாரு.

      Delete
  4. All easten Tamil speaking people Muslim people ,if you don't agree or not north and east will be merged again according to the India and Sri Lanka accord.Sri Lanka can be two languages speaking united country forever but can't be divided by the name of religion.
    If you don't agree then forget about your mother tongue TAMIL ...Learn URUDU and fights for your right.


    God bless you All!!

    ReplyDelete
  5. கேடீஸ்டாரன் என்ற கேடி, முன்னாள் தமிழ் பயங்கரவாதி.

    இந்தாளின் கருத்துக்களை, இந்தாளின் நாயும் மதிப்பதில்லை.

    ReplyDelete
  6. கொஞ்சம் விட்டு வையுங்கள்.
    பாவம்.
    நாட்கள் எண்ணப்பட்டுக்கொண்டிருக்கும் நல்லாட்சியில் வடக்கும் கிழக்கும் இணையும் என்ற நப்பாசையில் இந்த பாசிச புலி எச்சங்கள் இருந்துவிட்டுப்போகட்டும்.

    ReplyDelete
  7. இனவாத இந்துக்கள் கல்முனைனையின் வரலாறை துவேசத்துடன் மாற்ற நிணைப்பது கல்முனையில் இந்துக்கள் அழிவுக்கே வழிவகுக்கும்,,,

    ReplyDelete

Powered by Blogger.