Header Ads



பிரபாகரனை விட, சம்பந்தன் ஆபத்தானவர்

புலிகளின் தலைவர் பிரகாரனை விடவும், எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் ஆபத்தானவர் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

மாத்தளையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்…

வடக்கு முதலமைச்சர் ஒர் கடும்போக்குவாதி, இரட்டைக்குளம் சிங்கள பாடசாலையின் பிள்ளைகள் கழிப்பறை செல்வதற்குக்கூட நீரைப் பெற்றுக்கொடுக்க விக்னேஸ்வரன் மறுக்கின்றார்.

பிள்ளைகள் வீடுகளிலிருந்து நீர் கொண்டு வருவதாகக் கூறுகின்றனர். வேலுப்பிள்ளை பிரபாகரனை விடவும், சம்பந்தன் ஆபத்தானவர்.

உத்தேச அரசியல் அமைப்பு தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் லாம்பு, குடம் விளையாட்டே நடைபெறும்.

(முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன ஆட்சிக் காலத்தில் தேர்தலை ஒத்தி வைப்பதற்காக லாம்பு மற்றும் குடம் சின்னங்களைக் கொண்ட சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி அதில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் வெற்றியீட்டியது)

லாம்பிற்கு கூடுதல் வாக்கு அளிக்கப்பட்டால் நாடு பிளவடைவதனை தடுக்க முடியாது.

உத்தேச அரசியல் அமைப்பு நிறைவேற்றப்பட்டால் தமிழ், சிங்கள முஸ்லிம் மக்களுக்கு இடையில் நல்லிணக்கம் நீடிக்காது.

அண்மையில் ஸ்பெய்ன் மக்கள் எதிர்நோக்கிய அனுபவங்களை இலங்கையும் எதிர்நோக்க நேரிடும்.

ஒருமித்த நாடு என்ற பதம் ஒருமைப்படுத்திய நாடு என்ற தமிழ் அர்த்தத்தை கொண்டதாகும்.

சமஸ்டியை வழங்கினால் பின்னர் சமஸ்டி வழங்கப்பட்ட பகுதி விரும்பினால் மட்டுமே மீளவும் இணைந்து கொள்ள முடியும்.

உத்தேச அரசியல் அமைப்பு அமுல்படுத்தப்பட்டால் நோர்வே அரசாங்கம் நேரடியாகவே மாகாணங்களுக்கு ஆயுதங்களை வழங்கக்கூடிய பின்னணி உருவாகும் என உதய கம்மன்பில எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.