Header Ads



முதலையின் வாயில் சிக்கிய, மாணவரின் திகிலூட்டும் வாக்குமூலம்

தனது காலின் ஒரு பகுதியை இழந்த பின்னரும் முதலையுடன் சண்டையிட்டு தனது உயிரைக் காப்பாற்றிக் கொண்ட இளைஞர் ஒருவர் தொடர்பில் மாதம்பே பகுதியில் பதிவாகியுள்ளது.

24 வயதுடைய சானக மதுசான் என்பவரே தனது காலின் ஒரு பகுதியை முதலைக்கு இரையாக்கியவர்.

கடந்த 18ம் திகதி மஹாவெவ பகுதியில் பயணித்துக்கொண்டிருக்கையில் தொலைப்பேசி அழைப்பொன்று கிடைத்துள்ளது.

குறித்த தொலைப்பேசி அழைப்பிற்கு பதிலளிப்பதற்காக உந்துருளியை வீதியின் கரையில் நிறுத்திவிட்டு பாலம் ஒன்றிற்கு அருகில் அமர்ந்து கொண்டு தொலைப்பேசியில் உரையாடிக்கொண்டிருந்தார்.

திடீரென எதிர்ப்பாராக வகையில் மாபெரும் நீரிரைச்சல் சத்தத்துடன் முதலையொன்று தன்னை நோக்கி பாய்வதை அவதானித்துள்ளார்.

அந்த சம்பவம் தொடர்பில் மதுசான் இவ்வாறு விபரிக்கின்றார்,

'திடீரென பாரிய சத்தமொன்று கேட்டது.., நான் நீரோடையை நோக்கி பார்த்தேன். பாரிய உருவம் கொண்ட முதலையொன்று தன்னை நோக்கி பாய்ந்தது . ஓடுவதற்கு நேரம் அமையவில்லை . பாய்ந்த முதலை தனது வலது காலை வாயால் கௌவியது.வலது காலின் முழங்கால் வரையிலான பகுதி முதலையின் வாயிற்குள் சென்றது, , பாலத்திற்கு அருகில் இருந்த பிடியொன்றினை பிடித்து முதலையின் வாயிற்குள் அகப்பட்ட காலாலேயே தனது பலத்தினை கொண்டு உதைத்தேன். எனினும் தன்னுடைய உடல் பலம் முதலையின் பலத்திற்கு ஈடாகவில்லை. குறித்த ஓடையை நோக்கியே உடல் நகர்ந்தது.என்னுடைய கையடக்க தொலைப்பேசியும் எங்கேயோ விழுந்துவிட்டது. போராட முடியாமல் ஒரு சந்தர்ப்பத்தில் நீரிற்குள் இழுத்துச் செல்லப்பட்டேன். முதலை தன்னை முழுமையாக தன்வசப்படுத்தியது.எனக்கு நீந்தவும் தெரியாது. எனது இடது கால் முதலையின் வயிற்றுப்பகுதியில் உரசிக்கொண்டிருந்தது. எனினும் எனது முயற்சியை கைவிடவில்லை. தன்னை விடும் வரை இடது காலால் முதலையை தாக்கிக்கொண்டே சென்றேன். அதன்பின்னர் எனது கால்களின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் முதலை என்னை விட்டு ஒதுங்கியது.பின்னர் , ஒருமாதிரியாக ஏதோ ஒருவகையில் கரை சேர்ந்தேன். இந்நிலையில் தனது தொலைப்பேசியை தேடி அழைப்பினை ஏற்படுத்தி உதவிக்காக உறவினர்களை வரவழைத்து வைத்தியசாலைக்கு சென்று வீடு திரும்பினேன்.

இவ்வாறு மதுசான் தெரிவித்திருந்தார்.

இவ்வாறு முதலை தாக்குதலுக்கு உள்ளான மதுசான் , மாதம்பை சேனாநாயக்க தேசிய பாடசாலையில் கணிதப்பிரிவின் கல்வி பயின்று பல்கலைக்கழக அனுமதி பெற்ற இளைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.