Header Ads



"கோத்தபாய தவறிழைத்திருந்தாலும், ஜனாதிபதி மன்னிப்பு வழங்க வேண்டும்"

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தவறிழைத்திருந்தாலும், அவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க வேண்டும் என ஓய்வு பெற்ற இராணுவத்தினரின் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்திப்பின்போது கருத்து வெளியிட்டுள்ள ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி அட்மிரல் ஆனந்த பீரிஸ்,

கோத்தபாய ராஜபக்சவை கைது செய்வதற்கான இந்த முயற்சியை அனுமதிக்காதிருக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவறு செய்திருந்தாலும், அவர் மன்னிக்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். தன்னை கொலை செய்ய முயன்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கினர்.

எனவே இது ஒரு பிரச்சினையாக இருக்கக்கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

4 comments:

  1. Then give also forgiveness to all terrorist of SriLanka. Including LTTE.

    ReplyDelete
  2. இந்த எட்மிரல் எத்தனையாம் வகுப்புவரை படித்தாரோ தெரியாது மக்களின் பொதுபணத்தை நாசமாக்கிய விடயத்தில் கோத்தபாயவின் கைதை மன்னிக்க ஜனாதிபதிக்கு என்ன அறுகதையுண்டு ஏன் அவருடைய பணத்தையா கோத்தபாய நாசமாக்கினார்? மக்களுக்குறிய நீதிமன்றம் இந்த தீர்பை வழங்கியுள்ளது இதை யாரும் தடுக்ககூடாது.

    ReplyDelete
  3. I think this is reasonable to pardon him when the killer like Karuna Amman has been pardoned.

    ReplyDelete
  4. இந்த நாட்டுக்கு மாரி மாரி அரசு கொண்டு வருகிர மக்கள் மக்குகள்

    ReplyDelete

Powered by Blogger.