November 16, 2017

ஜெனிவா மனித உரிமை மாநாட்டில் அப்துர் ரஹ்மான், சர்வதேச ராஜதந்திரிகளுடனும் பேச்சு


ஜெனீவாவில் நடை பெற்று வருகின்ற சர்வதேச நேடுகளின் மனித உரிமை விடயம் தொடர்பான பூகோள மீளாய்வு மகா நாட்டில் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் பங்கேற்றுள்ளார். நேற்று (15.11.2017) காலை ஜெனீவா சென்றடைந்த அவர் நேற்று பிற்பகல் முதல் நாளை(17.11.2017) வரை நடை பெறுகின்ற இந்தப் பூகோள மீளாய்வு மகா நாட்டுக் கூட்டத்தில் சுயாதீனமாகப் பங்கேற்கின்றார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையினால் UPR (Universal Periodic Review) என அழைக்கப்படும் பூகோள மீளாய்வுக் கூட்டம் காலத்திற்கு காலம் தொடராக நடாத்தப்படுகின்றது. நவம்பர் 06 தொடக்கம் 17 ஆம் திகதி வரை நடாத்தப்படும் இந்த 28 ஆவது மீளாய்வுக் கூட்டத் தொடரில் உலக நாடுகளின் மனித உரிமை மற்றும் அதனோடு தொர்புபட்ட பல்வேறு விடயங்கள் பற்றி விவாதிக்கப்படுவதோடு தீர்மானங்களும் நிறைவேற்றப்படுகின்றன. 

அத்தோடு ஒவ்வொரு நாடுகளும் தமது குடிமக்களுக்கான மனித உரிமைகளை உத்தரவாதப்படுத்தி சமத்துவமும் நீதியுமான ஆட்சியினை உத்தரவாதப் படுத்ததனை உறுதி செய்வதற்கான ஆலோசனைகளும் அழுத்தங்களும் இந்த மீளாய்வு மகா நாட்டின் போது கொடுக்கப்படுகின்றன. 

அரசியல் ரீதியாக சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த இந்த மகா நாட்டில் இலங்கையின் மனித உரிமை மற்றும் அதனோடு தொடர்புபட்ட விடயங்களை விவாதிப்பதற்கான நேரம் நேற்று (15.11.2017) ஜெனீவா நேரப்படி 02.30 முதல் 06.30 வரை ஒதுக்கப்பட்டிருந்தது. இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் உயர்மட்ட தூதுக்குழு வொன்றும் இதில் பங்கேற்றிருற்தது. இந்தத் தூதுக்குழுவானது பிரதிமைச்சர் கலாநிதி ஹர்ச டீ சில்வா தலைமையில் ஜெனீவா கூட்டதில் பங்கேற்கிறது. இலங்கை விடயம் தொடர்பான இந்த உயர் மட்டக் கூட்டத்தில் சுயாதீனமாகப் பங்கேற்பதற்காகவே பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் விசேட தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டு ஜெனீவா சென்றுள்ளார்.

நேற்றைய கூட்டத்தின் போது ஏராளமான நாடுகள் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் முன்வைத்தன. இருப்பினும் இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரத்தியேகமான பிரச்சினைகள் தொடர்பாக குறிப்பாக எதுவும் பேசப்படவில்லை.
இந்நிலையில் ஜெனீவாவை தளமாகக் கொண்டியங்கும் பல்வேறு சர்வதேச சமூகப் பிரதிநிதிகளுடனும் இராஜ தந்திரிகளுடனும் அதே போன்று சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களுடனும் விசேட சந்திப்புக்களை பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் மேற்கொள்ளவுள்ளார்.

இதன்போது இலங்கையில் தொடரும் இனமதவாத அச்சுறுத்தல்கள்,  வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தலுள்ள சவால்கள், வடக்கு கிழக்கு தமிழ்-முஸ்லிம் மக்கள் எதிர் கொள்ளும் காணிப் பிரச்சினைகள், அரச படைகள் மற்றும் திணைக்ளங்களினால் கையகப்படுத்தப்படும் காணிகள், புதிய தேர்தல் திருத்த சட்டம் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள், அழுத்கம போன்ற கலவரங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீடுகள் ,  சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதில் காட்டப்பட்டு வரும் பாரபட்சமான அணுகு முறை மற்றும் இனங்ளுக்கிடையலான நிரந்தர நல்லணிக்கத்தை ஏற்படுத்துவதில்லை உள்ள சவால்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அப்துர் ரஹ்மான் பேசவுள்ளதோடு அறிக்கைகளையும் சமர்ப்பிக்கவுள்ளார்.

நமது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான நிரந்தரத் தீர்வுகளை பெற்றுக் கொள்ளும் பொருட்டு சர்வதேச இராஜ தந்திர நடவடிக்கைகளை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் NFGGயின் தவிசாளர் அப்துர் ரஹ்மான் அவர்களின் ஜெனீவா பயணமும் சர்வதேச இராஜ தந்திரிகளுடனான சந்திப்பும் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

5 கருத்துரைகள்:

We Mr. Abdulrahman Act very Smart Like our ACJU group...

வெறும் காணிப்பிரச்சினைக்கும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் உள்ள பிரச்சினைக்கும் ஜெனீவாவுக்கு போகும் இந்த கோஷ்டி தமிழர் கொலை செய்யப்பட்ட போது “ஐயையோ உள்வீட்டுப்பிரச்சினையை சர்வதேசத்துக்கு கொண்டு சென்று தாய்நாட்டுக்கு துரோகம் செய்கிறார்கள்” என்று ஓலமிட்டவர்கள்.
அதுவுமில்லாமல் அரபு மொழிதெரிந்தவர்களை முஸ்லிம் நாடுகளுக்கு அனுப்பி தமது அரச விசுவாசத்தைக்காட்டி எலும்புத்துண்டுகளுகு நக்கியவர்கள் இப்போது இன்ரநசனல் லெவலில் நடவடிக்கை எடுக்கிறார்களாம்!!!!
மீழ்குடியேற்ரம், காணிப்பிரச்சினை, சட்டம் ஒழுங்கு எல்லாம் அரசின்கைகளில் உள்லது இதில் பல அமைஉச்சுப்பதவிகள் வேறு.....எல்லாம் விட்டுவிட்டு இன்ரநசனல் போகிறார்கள்.
நான் அறிய 1977 இல் இருந்துஎந்த அரசு வந்தாலும் 5,6 அமைச்சர்கள் முஸ்லிம்கள். கேட்டால் சகோதரத்துவம் சமாதானம் என கதை விடுவார்கள்.
வெறும் காணிப்பிரச்சினைக்கு ஜெனீவா!!!!!
அங்க போய் சிங்களவனுக்கு சார்பாய் சொல்லிவிட்டு வெளியில் வந்து கதை விட்டு முஸ்லிம் இனத்துக்காக போராடினேன் இன்ரனசனலில் எனக்கதைவிட வாய்பிளந்து கேட்பார்கள்...முகியத்துவம் வாய்ந்த பயணம் என சொல்ல இந்த ஏமாளிக்கோஷ்டியும் டபுள்கேம் சுப்பராய் இருக்கு என சுயசந்தோசம் கொள்ள வேண்டியதுதான்.

என்ன அண்ணாசியள்..இஸ்ரேலும் சவூதியும் கூட்டாமே?
மக்காவும் மதீனாவும் யூதனிடம் மண்டியாமே?
நியூஸ்வீக்காரன் இண்டைக்கு செய்தி வெளியிட்டிருக்கிறான்.

இதை கேட்டால் உடனே புலி, இனவாதி என்பதைத்தவிர என்ன செய்வார்கள். இதையே மேற்குநாட்டில் உள்லவன் கேட்டால் அமெரிக்க ஏகாதிபத்தியம், சியோனிய சதி சூழ்ச்சி என தலைவெட்டின வாத்துமாதிரி ஓடுவார்கள். எல்லாம் ஏலாமல் போனால் இறைத்தூதனுக்கு எதிராகப்பேசிவிட்டான் கொல் அவனை என்பார்கள்.

சகோதரரே,
நீங்கள் சொல்வது உண்மைதான். அதாவது, தமிழ்மக்கள் தமக்கான நீதியைக்கோரி சவ்வதேச சமூகத்திடம் சென்ற வேளையில் அதைத் தடுக்கும் வகையில் பல முஸ்லிம் அரசியல் வாதிகள் நடந்து கொண்டார்கள் என்பது உண்மைதான்.
ஆனால், பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவ்வாறானவரல்ல. அவரது செயற்பாடுகளை நீண்ட பல வருடங்களாக அவதானித்து வருகிறேன்.
இனமத வேறுபாடுகளுக்கப்பால் அனைத்து மக்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என பேசுகின்ற ஒருவர் அவர். ஏனைய அரசியல் வாதிகளைப் போன்று உயர் அதிகாரங்களில் அவர் இல்லை என்பதனால் அவரது குரல் உங்களைப் போன்ற பலருக்கு கேட்காமல் போயிருக்கலாம்.
அண்மையில் கூட திருகோணமலையில் அவர் உரையாற்றுகின்ற போது தமழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நீதியைத் தடுக்க முற்பட்ட முஸ்லிம் அரசியல் வாதிகளை பகிரங்கமாகவே கண்டித்திருந்தார்.
இப்படியான மனித நேயமும் சமத்துவ நீதியும் கொண்ட அரசியல்வாதிகள்தான் நமக்குத் தேவைப்படுகிறார்கள்.
எனவே, அப்துர் ரஹ்மான் போன்ற நீதியான அரசியல் வாதிகளை நாம் வரவேற்போம். அவர்களின் தன்னலமற்ற அரசியல் முயற்சிகள் வெற்றிபெற வேண்டும் எனப்பிரார்திப்போம்.

அன்புள்ள மதியன்பன்,

அவ்வாறாயின் அதற்கான இணையத்தள சுட்டிகளை (லின்க்) கொடுத்தால் நன்றியுள்ளவனாயிருப்பேன்.
மேலும் திரு அப்துர் ரஹ்மான் அவர்கள் இதனை சுவிசில் தெரிவித்தாரா? ஜெனீவா மாநாட்டில்கூட வேண்டாம் ஆனால் சுவிசில் மாநாட்டுக்கு வெளியில் நின்ற பத்திரிகையாளரிடமோ அல்லது தமிழ்மக்களிடமோ தெரிவித்ததாக நான் அறியவில்லை!

Thanks Mr Mathyanban for kind and neutral reply to Vijai

Post a Comment