Header Ads



எங்கு ஊழல் இருந்தாலும், அதை வேரோடு பிடுங்குவோம்

டஜன் கணக்கான இளவரசர்கள், அமைச்சர்கள் மற்றும் தொழிலதிபர்களின் கைது என்பது, ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளின் தொடக்கமே என்று, அந்நாட்டின் தலைமை அரச வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

எங்கு ஊழல் இருந்தாலும், அதை வேரோடு எடுக்கும் பணிகளின் தொடக்க நிலையே இந்த கைதுகள்` என்று, ஷேக் சௌத் அல் மொஜேப் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சௌதி அரேபியாவின் அரசியல் தலைவர்களும், தொழிலதிபர்களும் கைதான தகவல் ஞாயிற்றுக்கிழமை வெளிவந்தது.

இது முடி இளவரசர் முகமது பின் சல்மானின் சக்திக்கு துணைநிற்பதைப் போல இருந்தது.

32 வயதாகும், முடி இளவரசரின் தலைமையில் செயல்படுகின்ற ஊழக்கு எதிரான அமைப்பு, 11 இளவரசர்கள், நான்கு அமைச்சர்கள் மற்றும் டஜன் கணக்கான முன்னாள் அமைச்சர்களை கைது செய்ய உத்தரவிட்டது. செல்வந்தரும், சர்வதேச தொழிலதிபருமான, அல்-வலீத் பின் தலாலும் இதில் அடங்குவார்.

விசாரணையில் உள்ள முன்னேற்றம் குறித்த மொஜிப்பின் அறிக்கையில், `முதல் பகுதி` முடிந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

"அதிக சாட்சியங்கள் ஒன்றுதிரட்டப்பட்டு, மிகவும் விளக்கமான கேள்விகள் கேட்கும் பணிகள் நடந்தன" என்று குறிப்பிட்டுள்ளது.

"இன்றைய தேதி வரை, சந்தேகத்திற்கு உரியவர்கள் அனைவருக்கும், சட்டரீதியான உதவிகளை பெறுவதற்கான முழு அணுகுமுறை அனுமதி அளிக்கப்பட்டுள்ளதோடு, விசாரணை சரியான நேரத்திலும், வெளிப்படைத்தன்மையுடனும் நடக்கும்" என்றார்.

2 comments:

  1. நீதிக்கு ஓர் முன்னுதாரணம்.

    ReplyDelete
  2. காலம் கடந்து பார்க்க வேண்டும் நீதிய,Trumpபின் சூழ்ச்சியா என்று

    ReplyDelete

Powered by Blogger.