November 14, 2017

''பிறக்கும் குழந்தைகள், அனைத்தும் முஸ்லிம்களே'' - உறுதிசெய்த பிரிட்டன் ஆய்வாளார் ஜஸ்டீன்

''பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் முஸ்லிம்களே'' என்ற முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல்லை ஆய்வின் மூலம் உறுதி செய்த பிரிட்டன் ஆய்வாளார்  ஜஸ்டீன்.
حَدَّثَنَا عَبْدَانُ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ أَخْبَرَنَا يُونُسُ عَنِ الزُّهْرِىِّ قَالَ أَخْبَرَنِى أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ أَبَا هُرَيْرَةَ - رضى الله عنه - قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم :அ مَا مِنْ مَوْلُودٍ إِلاَّ يُولَدُ عَلَى الْفِطْرَةِ ، فَأَبَوَاهُ يُهَوِّدَانِهِ أَوْ يُنَصِّرَانِهِ أَوْ يُمَجِّسَانِهِ ، كَمَا تُنْتَجُ البَهِيمَةُ بَهِيمَةً جَمْعَاءَ ، هَلْ تُحِسُّونَ فِيهَا مِنْ جَدْعَاءَ ؟ ஞ ثُمَّ يَقُولُ ( فِطْرَةَ اللَّهِ الَّتِى فَطَرَ النَّاسَ عَلَيْهَا لاَ تَبْدِيلَ لِخَلْقِ اللَّهِ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ ) –صحيح البخاري
''பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் (இஸ்லாமிய) இயல்பிலேயே பிறக்கின்றன வளர்ப்பு முறையில் தான் அந்த குழந்தைகள் யூதனாகவும், கிருதுவனகவும், நெருப்பை வணங்ககுடியவனாகவும் வார்த்தெடுக்க படுகின்றனர்.'' (அறிவிப்பவர் அபூ  ஹுரைரா  ரளியல்லாஹு அன்ஹு,  நூல்:   புகாரி 2568)
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருள் மொழிகளில் இதுவும் ஒன்று அந்த மாமனிதரின் இந்த சொல்லும் அவரின் தனித்துவத்தையும் அவர்களின் துதுத்துவத்தையும் அறுதியிட்டு உறுதி கூறும் அற்ப்புத சான்றுகளில் ஒன்றாக ஒளிர்கிறது.
பிரிட்டனை சார்ந்த ஆய்வாளார் டாக்கர் ஜெஸ்டின் குழந்தைகள் பற்றிய ஒரு ஆய்வில் ஈடு பட்டிருந்தார் சில ஆண்டுகள் தொடர்ந்த அவரது ஆய்வில் குழந்தைகள் பற்றிய பல அரிய தகவல்களை கண்டிறிந்தார்.
பிறக்கும் குழந்தைகள் தனது தாய் மற்றும் தந்தை மற்றும் தன்னை சார்ந்தவர்களின்கொள்கை களையும் கோட்பாடுகளையும் பார்க்காத நிலையிலும் அறியாத நிலையிலும் வேறு எந்த கொள்கைகளையும் கோட்பாடுகளையும் போதிக்க படாத நிலையிலேயும் வளர்க்க பட்டால் அப்படி வளர்க்க பட்ட குழந்தைகளின் உள்ளங்களில் ஏகத்துவம் மட்டுமே குடிகொண்டிருக்கும் என்பதும் அவர் கண்டிறிந்த உண்மைகளில் ஒன்றாகும்.
ஆக இஸ்லாம் என்பது ஏகத்துவம் என்பது இயல்பானது. திசைதிருப்பாமலும் எதையும் போதிக்காமலும் வளர்க்கப்படுகின்ற குழந்தைகளின் உள்ளங்களில் இயல்பாகவே அது தான் குடிகொண்டுள்ளது என்பது ஆய்வாளரின் முடிவாகும்.
இப்போது நாம் மேலே குறிப்பிட்டுள்ள அண்ணல் நபியின் அமுதமொழியை மீண்டும் படியுங்கள்.
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அந்த அருள் மொழியில் வார்த்தைகள் சொல்லி வைத்தது போல் அளந்து பயன் படுத்தப்பட்டுள்ளது.
வளர்ப்பு முறையில் தான் குழந்தைகள் முஸ்லிமாக ஏகத்துவ வாதியாக வார்த்து எடுக்க படுகின்றனர் என்று சொல்லப்படவில்லை.
மாறாக அந்த ஏகத்துவம் இயல்பாகவே அந்த குழந்தைகளின் உள்ளங்களில் நிலை பெற்றுள்ளது வளர்ப்புமுறையில் தான் அந்த குழந்தைகள் மாற்று மத த்தவர்களாக வார்க்கபடுகின்றனர் என்ற அற்புதமான உண்மையை நயமாக நபிகள் நாயகம் சொல்லி உள்ளார்கள்.
ஒரு ஆய்வாளான் சில ஆண்டுகளை ஆய்வில் செலவு செய்து பல்வேறு சோதனைகளை செய்து இந்த உண்மையை கண்டு பிடிப்பது பெரிய விசயமல்ல.
எந்த ஆய்வுகளிலும் சோதனைகளிலும் ஈடுபடாத முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் இந்த உண்மையை சர்வ சாதாரணமான வார்த்தைகளில் எப்படி சொல்ல முடிந்தது.
அவர் சாதாரண மனிதராக மட்டும் இருந்திருந்தால் அவர்களின் காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு எந்த அறிவு இருந்ததோ அந்த அறிவை கொண்டு மட்டுமே அவர்கள் பேசியிருக்க வேண்டும்.
1400 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு ஆய்வாளான் சில ஆண்டுகளை ஆய்வில் செலவு செய்து பெற்ற அறிவை அன்றே அண்ணல் நபியால் எப்படி சொல்ல முடிந்தது?!
அவர்கள் யாவற்றையும் அறிந்த படைத்தவனின் துதராக இருந்ததால் மட்டுமே இதை அன்றே சொல்ல முடிந்தது இந்த நபி மொழியும் உத்தநபியின் நுபுவத்தை உறுதி செய்யும் அற்புத வார்த்தைகளில் ஒன்றாகும்.
புகைப்படத்தில் வலது புறம் இருப்பவர்: ஆய்வாளார் ஜஸ்டீன்

5 கருத்துரைகள்:

தலையங்கத்தை மாற்றி விளங்கி கொண்ட ஆய்வாளர் ஐஸ்டீன் என்று தலையங்கமிடவும் ஏன் என்றால் இதை அவர் விளங்கி உருதிபடுத்திய பின்புதான் அதை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்று வந்துவிடும் ஆகயால் அல்லஹுவின் ஏவல்கள் விளக்கள்களுக்கு கட்டுபடுபவர்கள் அதாவது அரபு பாஷையில் முஸ்லிம் என்று வாழ்ந்த அனைவரும் இதை ஆய்வு செய்து விசுவாசித்து உருதிபடிதியுள்ளார்கள் நபி முகம்மது (ஸல்) மூலம் அல்லாஹு அறிவித்த இந்த நபி மொழியை உருதிபடுத்திவாழ்ந்தவர்கள் வாழ்கின்றவர்கள் பல பில்லியன் மக்களாவார்கள் என்று நான் தெரிவித்துக் கொள்கின்றேன் மேலும் இதை தெரியாமல் பல பிள்ளியன் மக்கள் வாழ்கின்றார்கள் பெரும் கைசேதமே!

Islam is the only religion accepted by Allah. For being Muslims, we're grateful to Allah in our life throughout.

It is great finding. This news must be published in English over social media.

Original Article from:-

http://www.telegraph.co.uk/news/religion/3512686/Children-are-born-believers-in-God-academic-claims.html

இது நாங்கள் வெட்கப்பட வேண்டிய விடயம்.
எமது அறிவியல் எங்கே. யூத , கிறிஸ்தவர்கள் கண்டு பிடித்தபின் நாங்கள் ஏடுகளை தூக்கி கொண்டு வருகிறறோம் அங்கே சொல்லி இருக்கு இங்கே சொல்லி இருக்கு என்று.
அதை ஏன் எம்மால் கண்டு பிடித்து சொல்ல முடியாது.

இஸ்லாமிய அறிவியல் மங்கிப்போய் உள்ளது. அல்குரானின் முதல் வசனமே "Ikrah" படிப்பீராக. அதனை வெறுமனே ஓதுவீராக என்று மொழிபெயர்த்து விட்டு வெறுமனே ஓதிக்கொண்டு இருக்கிறோம். ஓதலின் அர்த்தங்களை புரியாமல்.
இதட்குள் அறிவியலை மார்க்க கல்வி , உலக கல்வி என்று பிரித்து குறுகிய வட்டத்துக்குள் இருக்கிறோம்.

முதலில் உலக அறிவு மார்க்க அறிவு என்று பிரித்து பார்ப்பதை நிறுத்துங்கள். இஸ்லாம் என்பது அறிவியலால் பரப்ப பட்டது அட்புதங்களால் அல்ல. நபி (ஸல்) யுத்த கைதிகளை விடுவிக்க சிறுவர்களுக்கு அறிவை கற்று கொடுக்க வைத்தார்கள். அந்த அறிவு நம்மவர்கள் கருத்துப்படி உலக அறிவு.

முஸ்லீம் சமூகத்தில் உள்ள பிரச்சினையே 2 ஐயும் பிரித்து பார்ப்பதுதான்.
உலக அறிவு யூதர்களின் அறிவு என்றால் இஸ்லாமிய கல்வி திட்டம் எங்கே.? அதை யார் செய்வது.
வட்டி ஹராம் என்கிறோம். யூத சதி என்கிறோம். amana வங்கி கூட வட்டி என்கிறோம். so, வட்டி இல்லா இஸ்லாமிய வங்கியை எப்படி செய்வது. அதட்கு வழி காட்டுவது யார்? மார்க்கம் தெரிந்தவர்களுக்கு subject knowledge இல்லை. Subject புரிந்தவர்களுக்கு மார்க்க அறிவு இல்லை. இந்த இடைவெளி தீராத வரை எமது சமூகம் யூத அடிமைகளாய் வாழவேண்டியதுதான்.
இவ்வளவு ஏன்? அல்குரானில் 1000 க்கு மேல் விஞ்சான ஆதாரங்கள் உள்ளது. அவற்றில் 90% க்கு மேல் கண்டு பிடித்தது யார் யூதன் தானே. வெட்கம்.
யூதன் பூமி உருண்டை என்று கண்டு பிடித்த பின்னும் மதரஸாக்களில் அது தட்டையானது என்று அல்குரானையும் வைத்துக்கொண்டு syllabus போட்டு படித்தவர்கள் நாங்கள்தான்.
முஸ்லீம் சமூகம் அறிவியலை விட்டு வியாபாரமும் தரகு வேலை களில் இருந்து கொண்டு உலக அறிவு வேண்டாம் என்று இருந்தால் யூதனின் பிடியில் இருந்து மீள முடியாது.
இஸ்லாம் அறிவியலால் பரப்பப்பட்ட மார்க்கம். யூதனின் ஆதிக்கத்தை உலக அறிவியலுடன் கூடிய இஸ்லாமிய அறிவால் வெல்வோம்.

”இக்ரஹ்” குர்ஆனை படிப்பீராக என்பதை நாம் ஓதுவீராக என்று இதுவரை காலமும் அர்த்தம் புரியாமல், வசனங்களில் உள்ள பொருள் விளங்காமல் வெறுமனே ஓதிக் கொண்டுதான் இருக்கின்றோம் ஆனால் யூதர்கள் குர்ஆனை நம்மைப் போன்று வெறுமனே ஓதாமல் படிக்கின்றார்கள், அதில் சொல்லப்பட்டவைகளை ஆராய்கின்றார்கள், தேடுகின்றார்கள் அதனால்தான் அவர்களால் இது போன்ற பல்வேறு அறிவியல் ரீதியான கருத்துக்களை சொல்ல முடிகின்றது.
முஸ்லிம் சமூகம் குர்ஆனை ஓதி அதில் ஆளுக்கொரு கருத்து முரண்பட்டு ஆளுக்கொரு இயக்கம் ஆரம்பிக்கத்தான் லாயக்கு ஆனால் யூதர்களோ அதை அறிவியலின் வாசல் கதவாக பாவிக்கின்றார்கள்.

Post a Comment