Header Ads



அயோத்தியில் பள்ளிவாசல் வேண்டாம், ராமர் கோவில் கட்டுங்கள் - ஷியா முட்டாள்கள் அறிவிப்பு

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992–ம் ஆண்டு இடிக்கப்பட்டது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராம ஜென்ம பூமி - பாபர் மசூதி இடத்தில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான பிரச்சினை பல ஆண்டுகளாக உள்ளது. இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காணவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு யோசனை தெரிவித்தது. 

உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதியின் உரிமை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், இந்த பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.

சுப்ரீம் கோர்ட்டில் ஷியா வக்பு வாரியம் ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில்,

* பாபர் மசூதி அமைந்திருந்த இடம் எங்களுக்கு சொந்தமானது.

* அயோத்தி விவகாரத்தில் பிற பங்குதாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இணக்கமான தீர்வு காண்கிற உரிமை, எங்களுக்குத்தான் உண்டு.

* (அயோத்தியில்) அமைதியை கொண்டு வருவதற்கு, மிகவும் மரியாதைக்குரிய ராமர் பிறப்பிடத்தில் இருந்து, குறிப்பிட்ட தொலைவில், முஸ்லிம்கள் ஆதிக்கம் உள்ள இடத்தில் பாபர் மசூதியை கட்ட வேண்டும்.

* இந்த பிரச்சினையில் இணக்கமான தீர்வு காண்பது குறித்து ஆராய்வதற்கு ஒரு குழு அமைக்க அவகாசம் வழங்க வேண்டும் என கூறப்பட்டது.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அயோத்தி விவகாரத்தில் இரு தரப்பினரையும் சமரசம் செய்ய முயற்சி செய்து வரும் நிலையில் முக்கிய நகர்வாக அயோத்திக்கு பதிலாக லக்னோவில் மசூதி கட்ட விருப்பம் தெரிவித்து ஷியா பிரிவினர் தரப்பில் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

ஷியா முஸ்லிம் வக்பு வாரிய தலைவர் சையத் வாஷீம் ரிஸ்வி பேசுகையில், “அனைத்து தரப்பிடமும் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், அயோத்தியில் ராமர் கோவிலை கட்ட வேண்டும், லக்னோவில் மசூதியை கட்ட வேண்டும் என்ற திட்டத்திற்கு முன்வந்து உள்ளோம். இதுவே  தேசத்தில் அமைதி மற்றும் சகோதரத்தை உறுதிசெய்யும் தீர்வாகும்,” என கூறிஉள்ளார். 

2 comments:

  1. ஷீயாக்கள் என்றும் முட்டாள்கள் தான்.

    ReplyDelete
  2. Vali kedargal shiyaakkal

    ReplyDelete

Powered by Blogger.