November 30, 2017

எந்தப் பெண்ணுக்கும், நேர்ந்திடாத பெருந்துயரம்...

-எம்.புண்ணியமூர்த்தி க .தனசேகரன்-

இருபத்தைந்து வயதான இளம்பெண் ஹதியா உச்சரிக்கும் ஒரே ஒரு வார்த்தை....  ‘நான் சுதந்திரமாகவே இல்லை’!  

கட்டாய மதமாற்றம், ‘லவ் ஜிகாத்’, ஐ.எஸ்.ஐ.எஸ், திருணம் ரத்து, உச்சநீதிமன்ற தீர்ப்பு, என ஹதியாவை முன்வைத்து ஏராளமான விவாதங்கள் நடத்தப்படுகின்றன. இவையெல்லாவற்றையும் கடந்து, ‘கணவனைப் பிரிந்து கல்லூரிக்குள் அடைபட்டிருக்கிறேன்’ என்று சொல்லும் ஹதியாவின் வாழ்க்கை இதுவரை எந்தப் பெண்ணுக்கும் நேர்ந்திடாத பெருந்துயரம். என் கணவனிடம் ஒரு வார்த்தையாவது பேசவேண்டும். எனக்கு வெளியில் நடப்பது எதுவுமே தெரியவில்லை. நான் சுதந்திரமாகவே இல்லை’ என்று தவிப்பின் உச்சத்தில் நின்று ஹதியா உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தையும் ஈர நெஞ்சங்களில் ஈட்டியைப் பாய்ச்சுகிறது.

'யார் இந்த ஹதியா, என்ன நடந்தது?' கேரள மாநிலத்தின் கோட்டயத்தில், அசோகன் மணி, பொன்னம்மா தம்பதியின் மகள் பிறந்த அகிலாவைதான் இப்போது நாம் ஹதியாவாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அகிலா - ஹதியாவாக மாறியதுதான் இப்போது நடக்கும் இவ்வளவு சர்சைகளுக்கும் காரணம். “2015-ல் சேலத்தில் ஹோமியோபதி படித்துவந்த அகிலா முஸ்லிம் தோழமைகளுடன் ஏற்பட்ட பழக்கத்தால், கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாம் மதத்தைக் கடைபிடிக்க ஆரம்பித்து, ஒருகட்டத்தில் ஹதியாவாக மாறிவிட்டார். தொழுகையில் ஈடுபடுவது, வெளியில் செல்லும் போது புர்கா அணிந்துகொள்வது, ஹிஜாப் அணிந்துகொள்வது, குர்ரான் ஓதுவது போன்ற ஹதியாவின் செயல்பாடுகள் அவருடைய வீட்டுக்குத் தெரிய வந்தது. ‘இதெல்லாம் நமக்குச் சரிபட்டு வராது’ என்று முடிவெடுத்த அவரின் தந்தை அசோகன், படிப்பை நிறுத்திவிட்டு ஹதியாவை வீட்டுக்கு அழைத்துச்செல்ல முயற்சி செய்தார். ஆனால், ’எனக்கு அங்கு வர விருப்பமில்லை என்று மறுத்த ஹதியாவோ, சேலத்தில் தனக்கு இருக்கும் முஸ்லிம் தோழிகளான ஜஷீனா, பஷீனாவின் வீட்டில் ஐக்கியமானார். அந்தக் காலகட்டத்தில் ஜஷீனா குடும்பத்தின் உதவியோடு சத்திய சாரணி என்கிற நிறுவனத்தில் இஸ்லாம் கற்றுக்கொண்டிருந்தார் ஹதியா. இது, அவரின் தந்தை அசோகனைக் கோபப்படுத்தியது, “தன் மகளை எப்படியாவது மீட்க வேண்டும் என்ற வேட்கையோடு, ஜஷீனாவும், பஷீனாவும் கடத்திவிட்டதாகக் கேரள உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார். ஆனால் நீதிமன்றம் அதைத் தள்ளுபடி செய்து ஹதியாவை அவர் விருப்பப்படி வாழச் சொன்னது.


சிவராஜ் சித்த மருத்துவக்கல்லூரி

ஜஷீனா வீட்டில் ஹதியாவின் நாள்கள் நகர்ந்துகொண்டிருந்த நேரத்தில்தான், செபின் ஜஹான் என்பவரோடு ஹதியாவுக்குத் திருமணம் நடக்கிறது என்ற தகவல் வர, அசோகன் அதிர்ந்து விட்டார். ‘தீவிரவாத அமைப்புகள், தன் மகளை (லவ் ஜிகாத்) காதல் என்ற பெயரால் மதம் மாற்றி வெளிநாட்டுக்குக் கடத்தப்பார்க்கிறார்கள் அடுத்த ஆட்கொணர்வு மனு போட, நீதிமன்றமும் ’லவ் ஜிகாத்’ என்று சொல்லி ஹதியா - செபின் ஜஹான் திருமணத்தை ரத்து செய்து அறிவித்தது. அதுமட்டுமில்லாமல், ஹதியாவுக்குக் கடுமையான கண்காணிப்பு வளையம் போட்டது. ஹதியாவுக்கு செல்போன் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டு,  அதைக் கண்காணிக்க ஒரு பெண்காவலரும் நியமிக்கப்பட்டார். இந்தத் தீர்ப்புதான் ஒட்டுமொத்த இந்தியாவையும் இந்த வழக்கை நோக்கித் திரும்ப வைத்தது. பெற்றோருடன் சென்ற ஹதியாவை செபின் ஜஹானால் தொடர்புகொள்ள முடியவில்லை. அந்த நேரத்தில்தான் தன் வீட்டிலிருந்தவாறு ஹதியா, ஒரு வீடியோ வெளியிட்டார். “அதில் தான் தன் பெற்றோர்களால் துன்புறுத்தப்படுவதாகவும், நான் இங்கு இருந்தால் என்னைக் கொலைசெய்துவிடுவார்கள் என்றும் கதறினார். அதைப் பார்த்ததும் மனைவியை மீட்க உச்சநீதிமன்றத்துக்குச் சென்றார் செபின் ஜஹான். அந்த வழக்கில் 27ம் தேதி ஹதியாவிடம் நேரடி விசாரணை நடத்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஹதியா படிப்பைத் தொடரலாம் என்று உத்தரவிட்டதோடு ஹதியா படிக்கப்போகும் சேலம் சிவராஜ் சித்த மருத்துவக்கல்லூரி டீனை அவருக்கு கார்டியனாகவும் நியமித்து உத்தரவிட்டார்கள். ஆனால், திருமணத்தைப் பற்றியோ, லவ் ஜிகாத் பற்றியோ எதுவும் குறிப்பிடவில்லை.

இந்த நிலையில் கடந்த 28 ம் தேதி, விமானம் மூலம் கோவை அழைத்துவரப்பட்டு அங்கிருந்து சேலம் அழைத்துச் செல்லப்பட்டார் ஹதியா. கோவையில், இஸ்லாமிய அமைப்புகள்  அவரைச் சந்திக்கத் திட்டமிட்டார்கள். அப்படி ஏதாவது நடந்தால் மிகப்பெரிய மதப் பிரச்னை வந்துவிடும் என்று உஷாரான போலீஸார், கடுமையான கெடுபிடிகளோடு கோவையிலிருந்து ஹதியாவை அழைத்துச்சென்றார்கள். சேலம் வந்திறங்கியபோது ஹதியாவின் வீட்டுச்சிறை துன்பங்கள் குபீரென வெடித்தது, ’நான் சுதந்திரமாகவே இல்லை’ என்று போலீஸ் வேனில் இருந்தவாறு ஹதியா கத்திய காட்சியின் வலி சொற்களால் கடத்த முடியாதது. ‘என் கணவரைப் பார்க்காமல் என்னால் இருக்கமுடியாது. நிச்சயமாக, சேலத்தில் அவரைச் சந்திப்பேன். என்று சொன்ன ஹதியாவை எல்லோரும் விழிகள் விரிய பார்த்தார்கள். இன்னும் பதினொரு மாதங்கள் சேலத்தில் இண்டெர்ன்ஷிப் பயிற்சிக்காக ஹதியா தங்கியிருக்க வேண்டியுள்ளது. பதினொரு மாதங்களும் அவர் ஹாஸ்டலில்தான் தங்க வேண்டுமா? அவர் விருப்பப்பட்ட நபரைச் சந்திக்கலாமா கூடாதா போன்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. ’கல்லூரியில் செல்போன் பயன்படுத்த எல்லா மாணவர்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதே நடைமுறைதான் அந்தப் பெண்ணுக்கும். ஹாஸ்டலிலிருந்து வாரத்திற்கு ஒரு முறைதான் செல்ல முடியும் கூடவே ஒரு வார்டனும் செல்வார். இதுவும் எல்லா மாணவர்களுக்கும் உள்ள நடைமுறைதான். இதில் எங்களுக்கே நிறைய குழப்பங்கள் உள்ளன. அதைச் சரி செய்ய நீதிமன்றத்தை நாடுவோம். மற்றபடி எல்லா மாணவர்களைப் போலதான் இவரும்’ என்று சொல்லியிருக்கிறது கல்லூரி நிர்வாகம்.

கல்லூரி டீன் கார்டியனாக நியமிக்கப்பட்டுள்ளதால் ஹதியா இன்று டீனுடைய காரிலேயே ஹாஸ்டலுக்கு அழைத்துச்செல்லப்பட்டார். கல்லூரி டீன் செல்போனிலிருந்து ஹதியா தன் கணவருக்கு போன் செய்து பேசியதாகவும் சொல்கிறார்கள்.!

5 கருத்துரைகள்:

love jihad இற்கு பலியாகிய இன்னொரு பெண்.

“நாங்கள் ஈமான் கொண்டிருக்கின்றோம்” என்று கூறுவதனால் (மட்டும்) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று மனிதர்கள் எண்ணிக் கொண்டார்களா?
(அல்குர்ஆன் : 29:2)

யார் هدايتஐ நோக்கி நகருவாரோ அவரை பல சோதனைகள் சூழ்ந்தாலும் நிச்சயமாக பின்னர் சுகத்தை الله அனுபவிக்க செய்வான் انشا الله...

Indians must prosecute the incumbent prime minister & notorious criminal, Modi in high court for his crimes against humanity in Gujarat & Kashmir.

தெளிவாகத்தான் தகவல் உள்ளது இஸ்லாத்தை படித்தறிந்து ஏற்றபின் திருமணம் செய்தாரென்று.சின்னபுள்ள கதய நீங்க திரும்ப திரும்ப சொல்ரீங்க. ஒரு சில பெண்கள் மாற்றுமதத்தவருடன் தொடர்பாகி இஸ்லாத்தை வீசிவிடுகின்ரனர். அதற்காக நாம் கவலைப்படுவதில்லை , ஏனெனில் அவர்கள் அந்த மத்தை அறியவோ, அறிந்தோ செல்வதில்லை, வெறும் காதல்சுகத்தில் மதிமயங்கி மாண்டுபோகின்ரனர்.

Post a Comment