Header Ads



முஸ்லிம்கள், தமிழினமா...? ஒரு பார்வை

(Dr. Hasan Basree
Teaching Hospital Anuradhapura)

இலங்கை நாடு பல்லின,பல்மத மக்கள் வாழும் நாடு. பெரும்பான்மைச் சிங்களவர், இலங்கை + இந்திய தமிழர்கள், முஸ்லிம்கள் பறங்கியர் என பலவின மக்கள் வாழும் தேசம்.

மொழிரீதியாக பார்க்கையில் இலங்கையில் இரு மொழிகளே பிரதானம். சிங்களம் + தமிழ். வடகிழக்கு மலையக தமிழர்களும் சரி, இலங்கையில் எப்பாகத்தில் வாழும் பெரும்பாலான முஸ்லிம்களும் சரி தமிழையே தாய்மொழியாக கொண்டுள்ளனர். 

ஒரு இனமானது மொழியை அடிப்படையாகக் கொண்ட பூர்வீக கலாசார பண்புகளைக் கொண்ட படியினால் இலங்கை வாழ் முஸ்லிம்களும் கூட தமிழர்களே. தமிழினத்தைச் சேர்ந்தவர்களே என்ற ஒரு வாதம் நிலவி வருகிறது தமிழ் அரசியற் தலைவர்கள் மத்தியில். 

வடகிழக்கில் பெரும்பான்மையாக வாழும் நாட்டின் இரு சிறுபான்மை இனமும் தமிழ் மொழி பேசும் மக்கள் என்றபடியினால் ஒரு தமிழினமாக ஒன்று பட்டு நமது உரிமைகளை வென்றெடுக்கலாம் என்ற கோஷம் முன்வைக்கப்படுகிறது.

இது வடமாகாண முதலமைச்சர் அண்மையில் சொன்ன கூற்று மட்டுமல்ல. இலங்கையின் பிரிட்டிஷாரின் ஆட்சிக்காலத்தில் 1885 Legislative Council இல் கூட சொல்லப்பட்டது. சற்று காரசாரமாக. அன்றைய தமிAnuradhapuraற்போக்காளர் சேர். பொன் ராமனாதன் சொன்னார் 'இலங்கை முஸ்லிம்கள் என்பவர்கள் இஸ்லாமிய மதத்தை தழுவிய தென்னிந்த்திய தமிழர்களில் தாழ்ந்த சாதியினரே' என்று (நூறுல் ஹக் - தீவும் தீர்வுகளும்)

பிரிட்டிஷ் அரசாங்கம் முஸ்லிம்களுக்கு ஒரு அரசியல் பிரதிநிதித்துவத்தை உருவாக்க முன்மொழிமையில் சேர். பொன் ராமனாதன் சற்று காரசாரமாகவே சொல்லியிருந்தார் 'இலங்கைத் தமிழர்களும் முஸ்லிம்களும் வேறு வேறு இனமல்ல, அவர்கள் முஹம்மதியர்கள், தமிழினத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கென்று வேறு ஒரு பிரதிநிதித்துவம் தேவையில்லை' என்று. 

விடுதலைப் புலிகளும் முஸ்லிம்களைச் சுட்டுகையில் 'இஸ்லாமியத் தமிழர்கள்' என்ற பதத்தையே பயன்படுத்தி வந்திருக்கின்றனர். 

இப்போது கேள்வி? முஸ்லிம்களுடைய மதம் 'இஸ்லாம்' சரி. அவர்களுடைய இனம் என்ன?

இலங்கைத் தமிழர்கள் அவர்கள் மதம் இந்துவோ கிறிஸ்தவமோ இனம் என்று வருமகையில் அவர்கள் தமிழ் மொழியினை முதன்மைப்படுத்திய தமிழினம். அப்படியென்றால் முஸ்லிம்கள் எவ்வினம்?

முஸ்லிம்கள் இனம் எவ்வாறு அடையாளப்படுத்தப்படுகிறார்கள்? மொழியாலா? மதத்தாலா? பூர்வீகத்தினாலா? என்ற கேள்விகள் எழுந்தால் அக்கேள்விக்கான விடை 'மதத்தினைக் கொண்டே' என்பதே.

முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் அவர்களுடைய சகல கலாசார, வாழ்வியல்,நடைமுறைகளும் இஸ்லாம் மார்க்கத்தினை அடிப்படையாகக் கொண்டதே. மொழியினை அடிப்படையாக கொண்டது அல்ல.

இலங்கை முஸ்லிம்களில் கிட்டத்தட்ட 95% ஆனோரின் தாய்மொழி தமிழ்தான். முஸ்லிம்கள் தமிழ்மொழியினை நேசிப்பவர்களும்தான். ஆனால் 'தமிழ் மொழி எங்கள் உயிர் மூச்சு, தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' என்ற வீரவசனங்கள் இங்கு இல்லை.

தமிழ்மொழி ஒரு தெய்வீக அம்சம் பொருந்தியதாகவோ, இன உணர்வினைக் கொண்டதாகவோ முஸ்லிம்களிடத்தில் இல்லை அது ஒரு ஊடகம் என்பது மட்டுமே. தமிழ் மொழி மாத்திரமல்ல முஸ்லிம்கள் மத்தியில் குர்ஆனுடைய அறபு மொழி கூட ஒரு ஊடகம் மாத்திரமே. 

மொழியுணர்வா?மத உணர்வா? என்ற ஒரு கேள்வி எழுமையில் அங்கு முஸ்லிம்கள் மதத்திற்கே முன்னுரிமை அளிப்பர். இது இலங்கையில் மட்டுமல்ல, உலகில் எப்பாகத்தில் வாழ்ந்தாலும் சரி அவர்கள் என்ன மொழி பேசினாலும் முதல் முன்னுரிமை என்பது இஸ்லாமிய மதத்திற்கே. 

மதத்தினை விட மொழிக்கு முன்னுரிமை கொடுத்து முஸ்லிம்கள் போராடியதாக உலகில் எங்கினும் வரலாறு இல்லை. ஆனால் மதத்தினை அடிப்படையாக் கொண்டு உலகில் எப்பாகத்தில் முஸ்லிம்களுக்கு அனீதியிழைக்கப்பட்டாலும் முஸ்லிம்கள் போராடும் வரலாறு இன்றுவ்ரை நடந்து கொண்டே இருக்கிறது. கஷ்மீரோ, பலஸ்தீனமோ, ரோஹிய்ஙாவோ எங்கு முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு ஆதரவாக போர்க்கொடி தூக்கப்படுவது மார்க்கத்தினை அடிப்படையாக வைத்தே. மொழியை அடிப்படையாக வைத்து அல்ல. 

இனவுணர்வினை விட மதம் அவ்வளவு முக்கியமா? அவ்வளவு மதவெறியா இவர்களுக்கு? என்று கேள்வியெழுந்தால் நிச்சயமாக மதமே முஸ்லிம்களுக்கு முக்கியம். அதை பிறர் 'வெறி' என்று நினைத்தால் அது அவர் எண்ணம். முஸ்லிம்களை பொறுத்தவரையில் 'மதத்திற்கே முன்னுரிமை மதத்திற்கே முக்கியத்துவம்'

இலங்கையில் தமிழ் மொழியே பேசாத,எழுதவோ, வாசிக்கவோ தெரியாத சிங்கள மொழியினை தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம்கள் சுமார் 2% இற்கு குறைவாக இருப்பதாக ஒரு அறிக்கை சொல்கிறது. அதனால் அவர்கள் 'சிங்கள' இனமாக ஆகமாட்டார்கள். 

ஒரு சிங்கள, தமிழ், இனத்தைச் சார்ந்த ஒரு சகோதரர் நாளை முஸ்லிமாக மாறினால் அவர் அந்த நிமிடமே ஒரு முஸ்லிமாகத்தான் மாறுவார்.  அவர் இனம் முஸ்லிம் ஆகவே மாற்றம் பெறும். அதேபோல ஒரு முஸ்லிம் இஸ்லாத்தினை விட்டு விலகுகையில் அவர்  முஸ்லிம் என்ற அந்தஸ்திலிருந்து விலகும். இதுதான் இனம் பற்றிய முஸ்லிம்களின் நிலைப்பாடு. 


தமிழ், சிங்களம், ஆங்கிலம், ஹிந்தி, உர்தூ, மலையாளம், பஞ்சாபி என்ன மொழி பேசினாலும் முஸ்லிம்களிடம் அவர்களிடத்தில் நீங்கள் முஸ்லிமா? மொழிசார்ந்த இனமா? என்ற கேள்வி எழுந்தால் நிச்சயமாக அந்த இடத்தில் 'முஸ்லிம்' என்ற பதிலே முதல் வரும். அதன் பிறகுதான் மொழி வரும்.

அப்படி என்றால் 'சோனகர்-Moors என்றால் என்ன? 

போர்த்துக்கேய காலனித்துவ ஆட்சியளர்களால் இலங்கை முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட பெயர் இது. போர்த்துக்கேயர்கள் அரபியர்களைப் பொதுவாக 'Moros' என்று அழைப்பர். இதிலிருந்து திரிபடைந்ததே இந்த 'Moors'. 

அப்படியென்றால் 'சோனகர்'? இஸ்லாமிய மதத்தில் உள்ள 'ஸுன்னி' பிரிவிம் பெயரிலிரிந்து திரிபடைந்த சொல்லே இந்த சோனகர் என்று சொல்லப்படுகிறது.

ஆக சோனகர் - Moors என்போர் முஸ்லிம்களே. இவர்களுக்கிடையில் இன்னொரு மதத்தினை சார்ந்தவர்கள் யாரும் இல்லை. ஒரு பௌத்தச்சோனகரோ, கிறிஸ்தவச் சோனகரோ, இந்துச் சோனகரோ இலங்கையில் இல்லவே இல்லை. 

இப்போது கூட நீங்கள் சோனகரா? முஸ்லிமா? என்ற கேள்வியெழுந்தால், சந்தேகமில்லை. அங்கு அடுத்த கணமே 'முஸ்லிம்கள்' என்ற விடைதான் வரும்.

முஸ்லிம்களின் இனம் என்பது மதத்தினை அடிப்படையாகக் கொண்டதே.

வடகிழக்கில் வாழும் முஸ்லிம்களும் தமிழர்களும் ஒற்றுமையாக வாழவேண்டும். பெரும்பான்மையினத்தின் அடக்குமுறைகளை எதிர்க்கவேண்டும் என்பது உண்மைதான். ஆனால் ஒரு இனமாக ஆக்கப்பட்டுத்தான் வாழவேண்டும் எனும் கோஷம் சத்தியமாய்ச் சாத்தியமில்லை. 

தமிழ் பேசும் எல்லோரும் ஒரு இனமென்றால் மலையகத்தமிழர்களும் தமிழினமாக கருதப்படவேண்டும். நிஜத்தில் அது நிகழ்கிறதா? இல்லை. மலையகத்தமிழர்களின் பூர்வீகவேறுபாடு காரணமாக அவர்கள் வேறு ஓரினமாகவே கருதப்படுகிறார்கள். 1950களில் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டு அநாதரவாக்கப்பட்ட நிலைக்கானது அவ்வினம். தமிழ் பேசும் ஒரு இனம். அச்சட்டத்திற்கு பெருமளவு எதிர்ப்பு எழவேயில்லை தமிழ்தரப்பிடமிருந்து. ஆக மொழிபேசுவதால் ஓரினமாக கருதப்பட்டு சமநீதி வழங்க்கப்படும் என்பது அபாயகரமானது என்பது கடந்த காலம் நிரூபித்த ஒரு வரலாற்று உண்மை 

கடந்த காலத்தின் வடகிழக்கு தமிழ் ஆயுதக்கலாச்சார அனுபவங்களின் மிகக்கசப்பான  தருணங்கள் இலங்கை முஸ்லிம்கள் தமிழினத்தின் ஆட்சியிம் கீழ் நிம்மதியாக வாழலாம் என்ற நம்பிக்கையை எப்போதோ வேரோடு வீசியெறிந்துவிட்டது. 

முஸ்லிம்களும் தமிழர்களும் ஒற்றுமையாக நட்புணர்வுடம்,சகோதரத்துவ உணர்வுடன் வாழவேண்டும். ஆனால் இந்த 'Ethnical Merging - ஓரினமாக்கப்படுதல்' எனும் வாதம் முஸ்லிம்களிடத்தில் இல்லை.

அவர்கள் இஸ்லாம் மதத்தினை அடிப்படையாகக் கொண்ட மீ முஸ்லிம் இனமே தவிர தமிழினம் இல்லை என்பதே அவர்கள் நிலைப்பாடு.

9 comments:

  1. yes Dr. said well, we muslims do not care about the language. but, we do care our religion more than our soul

    ReplyDelete
  2. சிறிய திருத்தம் Dr. வங்காள தேசத்தின் வரலாற்றை சற்று படியுங்கள். மதத்தின் பெயரால் இரு இனத்தவர்களை(வங்காளி, உருது) இணைக்க முடியாமல் போன வரலாறு அங்கு உண்டு.

    ReplyDelete
  3. நாடு என்றல் எனதென்று தெரியுமா? இதனை முஸ்லீம் நாடுகள் உள்ளனவே அப்பொழுது ஏன் அதனை நாடுகளும் ஒன்று சேரவில்லை. ஒரு இனத்தின் அடிப்படையே மொழி தான் மதம் அல்ல. நீங்கள் சொல்லுவது போல் பார்த்தால் இந்த உலகத்தில் முக்கிய நன்கு மதங்களுக்கும் நன்கு பாடுகள் தான் இருக்கும். ஏண்டாப்பா இந்த பங்களாதேஷையும் பாகிஸ்தானையும் ஒன்றா சேத்து பாருங்க மொழி முக்கியமா? மதம் முக்கியான எண்டு சொல்லுவாங்கள். வாயில் வராத அரை தூக்கத்திலே படுத்த எல்லாம ்எழுதின இப்பிடித்தான். கேட்கிறவன் கேனயிண்ட ஒன்றுமே செய்யேலாது.

    ReplyDelete
    Replies
    1. சந்ரபால்!
      எங்களது சுயநிர்ணயத்தைப் பற்றி குறிப்பிட நாங்களே தகுதியானவர்கள். அவ்வாறே உங்களது நிலமையும்.
      எனவே முஸ்லிம்களின் இனம் சார்ந்த விடயங்களை தீர்மானிப்பதற்கு ராமநாதன் யார் ? நீர்தான் யார்?
      உமக்கு முடிந்தால் ஈழம் எடுத்துக்கொள். அல்லது இணைத்து எடுத்துக்கொள். அல்லது மொத்தமாக எடுத்துக்கொள். ( பகல் கனவா அல்லது ராக்கனவா என்பது உமது தூக்கத்தைப் பொறுத்தது )
      இது தமிழருக்கு எதிரான பதிவு அல்ல. சந்ரபால் என்ற இழிவான இனவாதிக்கானது.

      Delete
  4. மதம் என்பது வேறு. மொழி என்பது வேறு.

    ஒரே மதத்தில் உள்ளவர்கள் வேறு நாடுகளாக பிரிந்து இருப்பதும் தப்பில்லை.

    ஒரே மொழி பேசுபவர்கள், பிரிந்து இருப்பதுவும் தப்பில்லை.

    ReplyDelete
  5. Enathaan erunthaalum language ellama ondaijum padikka mudija moli arisa vadiyal maathaththa padikka mudijuthu moli tharijaddikku maaththmum enna solluthu endu ariya mudijathu

    ReplyDelete
  6. தனது “மதம்” யை இனமாக மாற்றினார்கள். பின்னர் மதம் யை வைத்து பல அரசியல் கட்சிகள் உருவாக்கி அதையும் வியாபாரம் ஆக்கி விட்டார்கள்.
    உலகில் வேறு எங்கும் இப்படி இல்லை.

    ReplyDelete
  7. Due to political exclusion, ethnic and linguistic discrimination, as well as economic neglect by the politically dominant western-wing, popular agitation and civil disobedience led to the war of independence in 1971

    Although the population of the two zones was close to equal, political power was concentrated in West Pakistan and it was widely perceived that East Pakistan was being exploited economically, leading to many grievances. Administration of two discontinuous territories was also seen as a challenge'

    ஆக பாகிஸ்தானிலிருந்து வங்காளதேசம் பிரிய மொழி தவிர்ந்த பிற காரணிகளே மிக முக்கியமானவையாக இருந்தன. பொருளாதாரப் புறக்கணிப்பு,அரசியல் ஒதுக்கல் மனப்பாங்கு மிகப்பாரிய சனத்தொகையினைக் கொண்ட இரு பகுதிகள் மிகமிகத் தொலைவாக அமைந்தவை என்பனவே அப்பிரிவினைக்கு காரணமாக அமைந்தன.

    ReplyDelete
  8. நபி பெருமானின் இறுதியுரை இன்றைய எல்லா சாசணங்களுக்கும் முதன்மை அடிப்படையாக எடுக்கப்படுகிறது!
    அந்த வரளாற்று சிறப்பான உரையில
    " அராபியர் அஜமிகளை விடவும் உயர்வானவர்கள் அல்ல!
    அவ்வாறே அஜமிகள் அராபியர்களை விட மேலாளானோர் அல்ல எல்லோரும் ஒரு தாய் ஒரு தந்தையிலிருந்தே பிறந்தோம்!*
    உலகிலேயே மொழி வெறி அதிகமான அராபியர்கள் மற்ற முழு பேசுவோலை மனிதராகவே மதிக்காதவர்கள்! அந்த அரபு குலத்தில் பிறந்தும் தான் பேசும் மொழி விஷேட சிறப்பு எதுவுமற்றது மொழிகள் வெறும் ஊடகம்தான் என பறைசாற்றியமை இன்றைக்கும் முன்மாதிரியானதுதான்!
    மொழிவெறியர்கள் ஜாக்கிறதை

    ReplyDelete

Powered by Blogger.