November 04, 2017

ஜாகீர்க்கு மலேசிய குடியுரிமை - நாடுகடத்தக் கோருகிறது இந்தியா


இந்தியாவில் வழக்கை எதிர்க்கொண்டு உள்ள ஜாகீர் நாயக் பிரபலமான மலேசிய மசூதியில் கடந்த மாதம் காணப்பட்டார். புத்ரா மசூதியில் பாதுகாவலருடன் ஜாகீர் நாயக் அபூர்வமாக அவ்வபோது பொதுமக்கள் மத்தியில் காணப்படுகிறார். புத்ரா மசூதி மலேசிய நாட்டு பிரதமர் அதிகமாக வந்து செல்லும் இடமாகும். நாயக்கிற்கு இங்கிலாந்து தடை விதித்து உள்ளது. 

இருப்பினும் மலேசியாவில் அவருக்கு நிரந்தரமான குடியுரிமை வழங்கப்பட்டு உள்ளது. மலேசிய நாட்டு அதிகாரிகளின் ஆதரவும் இருக்கிறது. 

கடந்த வாரம் இந்திய தேசிய புலனாய்வு பிரிவு (என்ஐஏ) ஜாகீர் நாயக்கிற்கு எதிராக 58 பக்க குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது. மலேசியாவில் ஜாகீர் நாயக் தஞ்சம் தொடர்பாக பாதுகாப்பு வல்லூநர்கள் தரப்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

கடந்த மாதம் புத்ரா மசூதியில் காணப்பட்ட ஜாகீர் நாயக்கிடம் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்தை சேர்ந்த பெண் செய்தியாளர் இந்தியாவில் நடைபெறும் விசாரணை தொடர்பாக கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு ஜாகீர் நாயக்,  “மன்னிக்கவும், பொது இடத்தில் பெண்களுடன் பேசுவது எனக்கு சரியானது கிடையாது,” என கூறி உள்ளார் என ராய்டர்ஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மலேசியா நாட்டு துணை பிரதமர் அகமது ஜாகித் பாராளுமன்றத்தில் செவ்வாய் அன்று பேசுகையில், ஜாகீர் நாயக்கிற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டது, எந்தஒரு முன்னுரிமை நடத்தை முறையும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றார். 

“மலேசியாவில் வசித்த போது, அவர் எந்தஒரு சட்டத்தையும், விதிமுறைகளையும் மீறவில்லை. இதனால், அவரை தடுக்கவோ, கைது செய்யவோ எந்தஒரு காரணமும் இல்லை,” என்றார் அகமது ஜாகித். ஜாகீர் நாயக் விவகாரம் தொடர்பாக இந்தியாவிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக எந்தஒரு கோரிக்கையும் எங்களுக்கு வரவில்லை எனவும் அகமது ஜாகிர் குறிப்பிட்டார். மலேசியாவில் கடந்த வருடம் ஜாகீர் நாயக்குடன் தானும், பிரதமரும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அகமது ஜாகித் பேஸ்புக்கில் வெளியிட்டார். 

இதற்கிடையே ஜாகீர் நாயக்கை மலேசியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என அந்நாட்டு ஐகோர்ட்டில் ஆர்வலர்கள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. மலேசியாவில் மொத்த மக்கள் தொகையில் 40 சதவித மக்கள் இஸ்லாமியர்கள் இல்லாத நிலையில் பலதரப்பட்ட மக்கள் வாழும் இங்கு அமைதிக்கு அவர் எச்சரிக்கையாக உள்ளார் என வழக்கில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜாகீர் நாயக் இந்தியாவில் சுமத்தப்பட்டு உள்ள குற்றச்சாட்டை மறுத்து உள்ளார். 

மே மாதம் குவைத் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்து பேசியிருந்த ஜாகீர் நாயக், நான் பிரபலமாக உள்ளதால் மோடி அரசால் நான் இலக்காக்கப்பட்டு உள்ளேன் என குற்றம் சாட்டியிருந்தார். 

இப்போது, ஜாகீர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்க மலேசியாவிற்கு கோரிக்கை விடுக்கப்படும் என வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது. “ஜாகீர் நாயக் விவகாரம் தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் முடியும் நிலையில் உள்ளது. இது முடிந்ததும் விரைவில் மலேசிய நாட்டு அரசுக்கு அதிகாரப்பூர்வமான கோரிக்கையை முன்வைப்போம். கோரிக்கை என்ன என்பது அடுத்த இரண்டு வாரங்களில் தெளிவாக தெரியும்,” என இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ராவீஷ் குமார் பேசிஉள்ளார். 

13 கருத்துரைகள்:

Firstly the notorious criminal & Indian prime minister,Narendra Modi who indiscriminately murdered innocent women, children, and folks in Gujarat & Kashmir must be arrested. The UN security council must immediately initiate an independent inquiry for these alleged crimes against humanity.

Firstly the notorious criminal & Indian prime minister,Narendra Modi who indiscriminately murdered innocent women, children, and folks in Gujarat & Kashmir must be arrested. The UN security council must immediately initiate an independent inquiry for these alleged crimes against humanity.

What is the benefit ..the Muslim Umma will get from this kind of one sided news? As Muslims , we all should know , why he was unfairly targeted.
the atrocities against the Muslims in India is going on unabated in entire India by the Modi Government. Modi himself is involved in massacres of Muslims in Gujarat.....So how can we publish this kind of unwanted news in your esteemed site?

Why is he hiding? Maylasia has to deport the terrorist to India to face the trial.

Blood drinker Modi first need to be hanged in public , before india call Zahir nayak,

Who can do this? If PJB practice low and order do it now.

He is telling the truth infront of public. That is the crime he did. Modi's givernment to punish him for nothing. Even if they punish hundreds of naik, the can not stop the growth of islam. Bcz islam is the religion of almighty Allah. Religion of peace.

He is telling the truth in front of public. That is the crime he did. Modi's government want to punish him for this crime. Even if they punish hundreds of Naik they can not stop the growth of islam. Bcz this is the religion of almighty god Allah.

Muslim countries should boycott Indian products and should deport Indian migrant workers back to India.

@ Ajan you are right. Malaysia should deport all the terrorists and its sympathizers from its soil.
Heard so many "Peelam" terrorists also staying and making havoc.
Some illegally take Malaysian passports in order to come to Europe .
All of them should be deported back to Sri Lanka.

Yes, Unequivocally truth, brother...

Show me one evidenve if he is a terrorist. U watch any video on youtube and find out a mistake.

@poru tota: Then you should inform the Muslim countries. Not point of publishing your comments here.

Hello jaffna Muslim, is this side for Muslims or Kafirs? don't allow kafir's commons. they don't know value of our Ulamas..iF JM continue it Insha Allah you should answer to this in Mahzar!

Post a Comment