Header Ads



டெங்கு நுளம்பு, ஆயிஷாவின் உயிரைக் குடித்தது

(பி.எம்.எம்.ஏ.காதர்)

மருதமுனையைச் சேர்ந்த பாடசாலை மாணவியொருவர் டெங்கு நோயால் நேற்று (23-11-2017)இரவு 8.00 மணியளவில் கொழும்பு வைத்தியசாலையில் உயிரிளந்துள்ளார். மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியில் ஏழாம் ஆண்டில் கல்வி கற்றுவந்த எம்.ஏ.சி.ஆயிஷா என்ற பன்னிரெண்டு வயது மாணவியே டெங்கு நோயால் உயிரிளந்துள்ளார்.

கடந்த 2017.11.04ஆம் திகதி ஏற்பட்ட காச்சல் காரணமாக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில்; அனுமதிக்கப்பட்போதே இந்த மாணவிக்கு டெங்கு தாக்கம் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.அங்கு சிகிச்சை பெற்ற நிiயில் 8ஆம் திகதி அம்பாறை வைத்திய சாலைக்கு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அங்கு அங்கு சிகிச்சை பெற்ற நிலையில் 21ஆம் கொழும்பு லேடி றிச்;வே வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையிலேயே 23ஆம் திகதி இரவு 8.00 மணியளவில் இந்த மாணவி உயிரிளந்துள்ளார்.இம்மாணவி மருதமுனையைச் சேர்ந்த ஆசிரியர்களான எம்.ஐ.எம்.அப்துல் காதர்,ஹம்சத் றம்சின் தம்பதியின் புதல்வியாவார்.

மருதமுனைப் பிரதேசத்தில் உள்ள வடிகான்களில் நீர் தேங்கி நிற்பதால்  சுகாததாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.இது தொடர்பில் சுகாதாரப் பிரிவினர் அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.இதே வேளை பாடசாலைகளின் வகுப்பறைகள் மற்றும் மலசலகூடப்பிரதேசங்களும் அவதானிக்கப்படவேண்டும்.

மருதமுனை பிரதேசத்தில் உள்ள வடிகான்களின் சீர்கேடு பற்றி 23ஆம் திகதி; பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.ஜனாஸா நல்லடக்கம் இன்று இரவு 9.30 மணிக்கு அக்பர் மையவாடியில் இடம்பெறவுள்ளது.  

No comments

Powered by Blogger.