Header Ads



வடகொரியாவின் பகையை, சம்பாதிக்குமா இலங்கை..?

அரச முறை பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தென் கொரிய ஜனாதிபதி முங் ஜே இன் ஆகியோருக்கு இடையில் இன்று மதியம் இருத்தரப்பு பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளது.

இந்த பேச்சுவார்த்தையின் பின்னர் இரண்டு அரச தலைவர்களும் கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்த கூட்டு அறிக்கையில் 15 விடயங்கள் அடங்கியுள்ளன.

வடகொரியாவின் ஏவுகணை சோதனை குறித்து அரச தலைவர்கள் அதில் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

ஏவுகணை சோதனையை வன்மையான கண்டித்துள்ளமை சம்பந்தமாகவும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் யோசனைகள் மூலம் விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை நம்பிக்கையான வகையில் செயற்படுத்தி வருகின்றமை தொடர்பில் தென் கொரிய ஜனாதிபதி, இலங்கைக்கு தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் யோசனைகளை அமுல்படுத்த செயற்பாட்டு ரீதியான ஒத்துழைப்புக்களை வழங்கவும் இரு நாடுகளின் தலைவர்கள் இணங்கியுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.