Header Ads



முஸ்லிம் தனியார் சட்டம், இந்­நாட்டின் சொத்து - கால­தா­ம­த­மா­வ­தற்கு உல­மா­சபை கார­ண­மல்ல

முஸ்லிம் தனியார் சட்டம் இந்­நாட்டின் சொத்து. இந்­நாட்டு முஸ்­லிம்­க­ளுக்கு கிடைத்­துள்ள வரப்­பி­ர­சா­தமே இது. இதில் மாற்­றங்கள் தேவை என்­பதில் மாற்­றுக்­க­ருத்து இல்லை. ஷரீ­அத்தின் விட­யத்தில் எதில் நெகிழ்­வுத்­தன்மை, தாரா­ளத்­தன்மை இருக்­கி­றதோ அதில் மாற்­றங்­களைச் செய்­யலாம். ஆனால், எந்த விட­யங்­களை மாற்ற முடி­யாதோ அதில் திருத்­தங்­களை செய்ய முடி­யாது.

முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்­க­ளுக்­கான சிபார்­சுகள் கால­தா­ம­த­மா­வ­தற்கு உல­மா­சபை கார­ண­மல்ல என அகில இலங்கை ஜம்­இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி தெரி­வித்தார்.

முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்கள் தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்;

முஸ்லிம் தனியார் சட்­டத்தில் மேற்­கொள்ள வேண்­டிய திருத்­தங்கள் தொடர்ந்தும் கால­தா­ம­தப்­பட்டு வரு­வ­தா­கவும், சில விட­யங்­களில் தெளி­வுகள் இன்­மை­யா­லுமே குழுவின் உறுப்­பி­னர்கள் சிலரால் கடந்த 26 ஆம் திகதி புதி­யதோர் அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்­டது.

உலமா சபையின் நிலைப்­பாடு மிகவும் தெளி­வா­ன­தாகும். முஸ்லிம் தனியார் சட்­டத்தில் உட­ன­டி­யாக திருத்­தப்­பட வேண்­டி­ய­வற்றை அவ­ச­ர­மாகச் செய்வோம். ஏனை­ய­வற்றை பிறகு மாற்­றிக்­கொள்­ளலாம். எடுத்த எடுப்பில் மாற்­றங்­களைச் செய்ய முடி­யாது.

உலமா சபையின் பத்வா குழுவில் அனைத்து மத்­ஹ­பு­க­ளையும், அமைப்­பு­க­ளையும் சேர்ந்த 40 உல­மாக்கள் இருக்­கி­றார்கள். இக்­குழு பல தட­வைகள் ஒன்றுக் கூடி முஸ்லிம் தனியார் சட்ட திருத்­தங்கள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டி­யி­ருக்­கி­றது. ஆலோ­ச­னை­களை வழங்­கி­யி­ருக்­கி­றது. அவர்­க­ளது ஆலோ­ச­னைகள் முஸ்லிம் தனியார் சட்ட திருத்த சிபார்சு குழு­வுடன் பகிர்ந்துக் கொள்­ளப்­பட்­டுள்­ளன.

எமது முன்­மொ­ழி­வு­களை எழுத்து மூலம் குழு­விடம் கைய­ளித்­து­விட்டோம். முஸ்லிம் தனியார் சட்­டத்தில் தேவை­யான விட­யங்­களில் திருத்­தங்­களைக் கொண்டு வரலாம். ஷரீ­அத்­துக்கு முர­ணற்ற காலத்­துக்குத் தேவை­யான மாற்­றங்­களை உள்­ள­டக்­கலாம். ஷரீ­ஆவின் சில அடிப்­ப­டை­களில் மாற்­றங்­க­ளையோ, திருத்­தங்­க­ளையோ அனு­ம­திக்க முடி­யாது.

உலமா சபை தனது நிலைப்­பாட்டை பத்வா குழுவைக் கூட்டி ஆலோ­சனை நடத்தி 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதமே சிபார்சு குழு­விடம் தெரி­வித்­து­விட்­டது. இந்தக் கூட்­டத்தில் 25 உல­மாக்கள் பங்­கேற்­றனர். இதே நிலைப்­பாட்­டினை 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி ஜாமிஆ நளீ­மிய்­யாவில் ஏற்­பாடு செய்­தி­ருந்த கூட்­டத்­திலும் உறுதி செய்­துள்­ளது. அன்று முதல் இன்று வரை உலமா சபை அதே நிலைப்­பாட்­டி­லேயே இருக்­கி­றது.

இந்­நி­லையில் முஸ்லிம் தனியார் சட்­டத்­தி­ருத்த சிபார்­சுகள் தொடர்ந்தும் கால தாம­த­மா­வதால் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்­களில் உலமா சபையின் பத்வா குழு ஒன்று கூடி அதே நிலைப்­பாட்­டி­னையே அறி­வித்­தது.

முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்­காக ஏற்­க­னவே இரு குழுக்கள் நிய­மிக்­கப்­பட்டு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டன. அந்தக் குழுக்களும் ஏற்னவே சில சிபார்சுகளை முன்வைத்துள்ளன. எனவே, முஸ்லிம் தனியார் சட்ட திருத்தங்கள் இந்த இரு குழுக்களின் கருத்துகளையும் உள்ளடக்கியதாகவே அமைய வேண்டும். எமது தனித்துவம் இழக்கப்படும் வகையிலான திருத்தங்கள் அமையக்கூடாது என்றார்.

1 comment:

Powered by Blogger.