Header Ads



நஞ்சு போத்தல் டிலான் ஐ.தே.க. பிரமுகர்களுக்கு எச்சரிக்கை

சுதந்திரக் கட்சியை ​ஒன்றிணைத்தால் ஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடிக்க முடியும் என்று ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

பதுளை - ஹாலிஎலவில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் அமைச்சர் டிலான் பெரேரா கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் ஐ.தே.க. வை தோற்கடிக்க நான் நஞ்சு போத்தலுடன் ஊடக சந்திப்பொன்றை நடத்தினேன்.

ஆனாலும் அந்தத் தேர்தலில் யாருக்கும் தனித்து அரசமைக்கும் ஆணை கிட்டவில்லை. ஐ.தே.க. 106 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சுதந்திரக் கட்சி 95 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பெற்றுக் கொண்டது.

தேர்தலுக்கு முன்னர் நஞ்சுக் குப்பியுடன் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டது குறித்து இன்னும் என்னை கேலிச் சித்திரங்கள் வரைந்து கலாய்க்கின்றார்கள். 

நான் நல்லதண்ணி பிரதேசத்தில் நஞ்சுக் குப்பியுடன் காத்திருப்பதாக அண்மையில் கூட ஒரு பத்திரிகை கார்ட்டூன் வரைந்திருந்தது. உண்மைதான். நான் நல்லதண்ணி பிரதேசத்தில் காத்திருக்க விருப்பம் கொண்டுள்ளேன். 

ஏனெனில் அப்போதுதான் ஹட்டன் பிரதேசம் மற்றும் ரத்தினபுரி பிரதேசங்களில் இருந்து இரண்டு வழிகளில் வரும் எமது கட்சிக்காரர்களை ஒன்றிணைக்க முடியும்.

அவ்வாறு சுதந்திரக் கட்சியை மீண்டும் ஒன்றிணைக்க முடியும். ஒன்றிணைப்பது மாத்திரமன்றி அதன் மூலம் ஐ.தே.க.வை தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கையும் எனக்குள் ஆழமாக இருக்கின்றது.

எனவே ஜனாதிபதியிடம் அளவுக்கு அதிகமாக உங்கள் அழுத்தங்களை பிரயோகிக்க முயல வேண்டாம் என்று நான் ஐ.தே.க. பிரமுகர்களுக்கு எச்சரிக்கை விடுக்க விரும்புகின்றேன் என்றும் அமைச்சர் டிலான் பெரேரா தொடர்நதும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.