Header Ads



ஐ.தே.க. பற்றி வெளியான, ஆய்வுத் தகவல்

பொதுமக்களிடம் தனிப்பட்டமுறையில் செல்வாக்குப் பெற்றுள்ள தலைவர்கள் என்று ஐ.தே.க.வில் யாரும் இல்லை என்பது கருத்துக் கணிப்பொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சிக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கை நாடி பிடித்துப் பார்க்கும் வகையில் குளோபல் இன்வெஸ்ட்மண்ட் என்ற ஆய்வு நிறுவனம் மூலம் அண்மையில் நாடளாவிய ரீதியில் கருத்துக்கணிப்பொன்று மேற்கொண்டிருந்தது.

எதிர்வரும் தேர்தல்களின் போது கட்சியின் வெற்றிக்காக வகுக்கக் கூடிய வியூகங்கள் தொடர்பான திட்டமிடலுக்கான ஐ.தே.க. தலைவர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த நடவடிக்கையை மேற்கொள்ள குறித்த நிறுவனத்துக்கு பொறுப்பை ஒப்படைத்திருந்தார்.

இதன்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களில் எவரும் தனிப்பட்ட முறையில் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

அதே ​நேரம் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஐ.தே.க. மேற்கொண்ட பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மக்கள் மத்தியில் வரவேற்புப் பெற்றுள்ளமையும் தெரியவந்துள்ளது.

மேலும், இவ்வாறான பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் முதலீடுகள் போன்ற நடவடிக்கைகள் மூலமாக மட்டுமே எதிர்வரும் தேர்தல்களில் வெற்றிபெற ஏதுவாக இருக்கும் என்றும் குறித்த கருத்துக் கணிப்பு மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.