Header Ads



தேசிய கொடிக்கு கௌரவமளிக்க மறுப்போர் நாட்டைவிட்டே வெளியேறலாம்

தேசிய கொடிக்கு கௌரவமளிக்க மறுக்கும் எவரும் நாட்டை விட்டே வெளியேறலாம் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நாட்டின் தேசியக் கொடியில் கைவைப்பதற்கு எவருக்கும் இடமளிக்க முடியாது என குறிப்பிட்ட அமைச்சர் அதே போன்று சிங்களத்திலும் தமிழிலும் இசைக்கப்படும் தேசிய கீதத்துக்கு கௌரவமளிக்காதவர்கள் அடிப்படைவாதிகளே என்றும் தெரிவித்தார்.

தேசியக் கொடியை நிராகரிப்பதன் மூலம் வட மாகாண அமைச்சர் சர்வேஸ்வரன் பிரபாகரனைப் போன்று வீரராகப் பார்க்கின்றாரோ? என குறிப்பிட்ட அமைச்சர், இவ்வாறு செயற்படுபவர்கள் உள்ளபோது புதிய அரசியலமைப்பு சாத்தியமாவது எவ்வாறு என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
தேசியக் கொடியில் கைவைக்க எவருக்கும் இடமளிக்க முடியாது.

தமிழராக இருந்தாலும் சிங்களவராக இருந்தாலும் தேசியக் கொடிக்கும் இரு மொழியிலும் பாடப்படும் தேசிய கீதத்துக்கும் கௌரவமளிக்க முடியாவிட்டால் அவர்கள் நாட்டைவிட்டே செல்ல முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெளிவிவகார அமைச்சு மீதான வரவு செலவுத்திட்ட விவாகத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் தயாசிறி இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இலங்கையின் தேசியக் கொடி அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்திலே உருவாக்கப்பட்டுள்ளது. அதனை உருவாக்கியதில் எஸ்.டபிள்யூ.ஆர்.பி. பண்டாரநாயக்க, பீ.எஸ். சேனாநாயக்க, ஜீ.ஜீ பொன்னம்பலம் நடேசன், டி.பி.ஜாயா போன்றவர்கள் பெயரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர். இதனை இப்போதுள்ள அரசியல் வாதிகள் உணர்ந்து கொள்வது முக்கியம். பல வாதவிவாதங்களுக்குப் பின்னர் எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் மூலம் உருவாக்கப்பட்டதே இந்த தேசியக்கொடி.

தேசியக் கொடியில் வாளுடன் உள்ள சிங்கம் தமிழர்களை காலால் மிதிப்பதாக இச் சபையில் எம்.பி. ஒருவர் தெரிவித்துள்ளார். இத்தகைய அடிப்படைவாதிகள் தமிழர்களிலும் சிங்களவர்களிலும் முஸ்லிம்களிலும் உள்ளனர்.

தமிழ் தலைமைகளில் நாம் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரே தலைவர் எதிர்க்கட்சித் தலைவர்கள் இரா. சம்பந்தன் மட்டுமே விக்னேஸ்வரனை தமிழர்களின் தலைவராக ஏற்க முடியாது சிவாஜிலிங்கம் போன்ற பைத்தியக்காரர்களும் உள்ளனர். தமது அரசியல் நோக்கத்துக்காகவே சிலர் தேசியக் கொடியை அவமதிக்கப்பார்க்கின்றார்கள்.

தேசிய கீதம் தமிழில் பாடப்படுவதை சிலர் எதிர்க்கின்றனர். அவர்கள் அடிப்படைவாதிகளே. தீவிர தமிழின வாதம், தீவிரவாதம் போன்றவற்றை நாட்டிலிருந்து ஒழித்துக் கட்டவேண்டும் பிரபாகரன் யுகம் மீண்டும் தலைதூக்க இடமளிக்க முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

1 comment:

  1. podu bala sena thesiya kodiya matriyamaithu porattam natathiya pothu neeyellam engu irunthappa.

    ReplyDelete

Powered by Blogger.