Header Ads



இலங்கை தேசிய அணியை நோக்கி, ரஷாட் ஆப்தீன்


சைனுல்ஆப்தீன் – நூருல் ஹுதா தம்பதிகளின் அன்புப் புதல்வர் ரஷாட். இவர் நீர்கொழும்பு- பலஹத்துறையை சேர்ந்தவர். ஓர் இளம் வேகப் பந்து வீச்சாளராக முன்னேறிவரும் ரஷாட் ஆப்தீன் குறித்து இங்கு பார்ப்போம்.

பாடசாலைக் காலம் முதல் பிரதேச கிரிக்கட் போட்டிகளில் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக ரஷாட் மிளிர்ந்து வந்தார். தரம்- 9 வரை நீர்/அல்-பலாஹ் மகா வித்தியாலயத்தில் கற்ற இவர் பின்னர், உயர்தரம் வரை நீர்/விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில் கற்றார். பாடசாலை வாழ்க்கை முடிந்ததும் தன்னை தொழில் வாழ்க்கைக்கு பழக்கப்படுத்தினாலும், கிரிக்கட் மீதான இவரது ஆர்வம் குறையவில்லை.

தொடர்ந்தும் கிரிக்கட்டிலும் கரிசனை காட்டினார். இதுவரை மென்பந்து கிரிக்கட்டில் மிளிர்ந்து வந்த ரஷாட், வன்பந்து(Hard Ball) கிரிக்கட்டில் தன்னை இவ்வருடம் ஈடுபடுத்திப் பார்த்தார். கொழும்பை மையமாகக் கொண்ட Harrow கிரிக்கட் அணியில் சேர்ந்தார். அகில இலங்கை ரீதியான Division 3 போட்டியில் இவ்வணி சார்பாக பங்கேற்றார். 2 ஆவது சுற்றில் வெளியேறியபோதும், இவ்வணிக்காக 7 போட்டிகளில் விளையாடி, தான்25 விக்கட்டுக்களை கைப்பற்றிய மகிழ்ச்சி ரஷாடை தொடர்ந்தும் முன்னேறச் செய்தது.

தொடர் முயற்சிகளுக்கான அங்கீகாரம் அடுத்து அவரை நோக்கி வந்தது. கடந்த மாதம் இலங்கை கிரிக்கட் சபையில் இருந்து சர்வதேச போட்டியொன்றுக்கான தேர்வுக்கான அழைப்பு ரஷாடை வந்தடைந்தது. 20 பேர் நேர்முக தேர்வுக்கு வருகை தந்திருந்தனர். அதில்14 பேர் தெரிவாகினர். வேகப்பந்து வீச்சாளராக ரஷாட் இதில் தெரிவானார்.

செப்டெம்பர்30 ஆம் திகதி இலங்கை கிரிக்கட் சபையின் அனுசரணையில் மலேசியா பயணமாகியது இந்தக் குழு. Colombo District Cricket Association எனும் பெயர் இவர்களது அணிக்கு வழங்கப்பட்டது. இந்தியாவில் இருந்து மும்பை அணியும், பங்களாதேஷில் இருந்து கலபகன் அணியும், மலேசியாவின் மலேசியன் மலாய்ஸ் அணிகளும் இப்போட்டியில் பங்குபற்றின.

இதில் இலங்கை அணி 5 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றியை சுவீகரித்தது. இலங்கை அணி சார்பாக அதிகூடிய விக்கெட்டுக்களான 13 விக்கெட்டுக்களை ரஷாட் கைப்பற்றினார். இதன்மூலம் பல புதிய அனுபவங்களை பெற முடிந்ததாகவும், சக அணி வீரர்களிடம் இருந்து நிறைய விடயங்களை தன்னால் கற்றுக்கொள்ள இது சிறந்த சந்தர்ப்பமாக அமைந்ததாகவும் கூறுகின்றார்.

2

ரஷாதின் சகோதரர் வசீம் செய்னுல் ஆப்தீன் இலங்கை தேசிய உதைப்பந்தாட்ட அணியில் கோல் காப்பாளராக பணியாற்றினார். ஒரு போட்டியின் தோல்விக்கு அவர் காரணமாக இருந்ததாக  மனம் வருந்தியதில், பலரது ஆலோசணைகளை புறம்தள்ளி, பொறுப்பு கூறும் வகையில் தனது கோல் காப்பாளர் பதவியில் இருந்து விலகி தேசிய அணியை விட்டு வெளியறினார் என்பதும் குறிப்பிட தக்கது.

3 comments:

  1. congratulations Rashad!
    May Allah help you to succeed in your carrier

    ReplyDelete
  2. May Allah bless u .... Keep RoCkiNg bro

    ReplyDelete
  3. Congrats ! May almighty Allah's unparalleled blessing be upon with you, brother.

    ReplyDelete

Powered by Blogger.