Header Ads



சில்லறைக்கு எல்லாம் மூக்கை நுழைக்கும் ஜனாதிபதி, கிந்தோட்டை அசம்பாவிதம் பற்றி பொடுபோக்கு

கிந்தோட்டை அசம்பாவிதம் தொடர்பில் ஜனாதிபதி மைதிரிபால சிரிசேனவின் மவுனம் கவலை அளிப்பதாக களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த குறிப்பிட்டார்.

நேற்று அலுத்கமை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,

கிந்தோட்டை சம்பவம் இனமுருகல் நிலைக்கு சென்றுள்ளமைக்கு அரசாங்கம் பெறுப்பேற்க வேண்டும். சுமார் மூன்று நாட்களாக பிரச்சினை தொடர்ந்துள்ள நிலையில் எஸ் டி எப் பாதுகாப்பு மாலை வேளையில் அகற்றப்பட்டுள்ளது.

கேட்டால் பொலிஸ் மா அதிபருக்கு இதுபற்றி தெரியாதாம் , ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளராக இருக்கும் அமைச்சர் வஜிரவுக்கும் தெரியாதாம்.அப்படியானால் பொலிஸ் பாதுகாப்பை விளக்கிக்கொள்ள உத்தரவிட்டது யார் என்பதை அரசாங்கம் கூறவேண்டும்.

கிந்தோட்டை அசம்பாவிதம் தொடர்பில் ஜனாதிபதி மைதிரிபால சிரிசேன இதுவரை வாய் திறக்கவில்லை. நாட்டின் தலைவர் இவ்வாறு பொடுபோக்காக இருப்பது வேடிக்கையாக உள்ளது.சில்லறை பிரச்சினைகளுக்கு எல்லாம் மூக்கை நுழைக்கும் ஜனாதிபதி இந்த விடயத்தில் இதுவரை எதுவும் பேசல்லை.

அலுத்கமை கலவரம் நடந்த போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் கோத்தாபய ராஜபக்‌ஷ நாட்டில் இருக்கவில்லை ஆனால் கலவரம் நடந்து மறுநாள் முன்னாள் மஹிந்த ராஜபக்‌ஷ விமான நிலையத்தில் இருந்து பேருவளைக்கே சென்றார்.அவரது மகன் நாமல் ராஜபக்‌ஷவும் களத்திற்கு சென்றார்.அங்கு பொலிஸ் விஷேட அதிரடிப்படை முகாம் ஒன்றை நிறுவினார்.ராணுவத்தை களத்தில் இறக்கி சேதமடைந்த சொத்துக்களை புனரமைப்பு செய்து கொடுத்தார்.ஆனால் அவர் மதீப்பீடு செத்த இழப்பீட்டை கூட இந்த அரசு வழங்கவில்லை ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்கள் ஆகியும் இன்னும் அலுத்கமைக்கு நீதியும் கிடைக்கவில்லை என அவர் அங்கு குறிப்பிட்டார்.

1 comment:

Powered by Blogger.