Header Ads



தமிழர்கள் அதிக பிள்ளைகளை பெறாவிட்டால் சிறுபான்மையிலும், சிறுபான்மையாக மாறவேண்டிய அவலம் ஏற்படும்

தமிழ்க்குடும்பங்கள் பல வருடங்களுக்கு முன்னர் சராசரியாக ஐந்து பிள்ளைகளைக் கொண்டிருந்தன. ஆனால், இப்போது தமிழ்க்குடும்பங்கள் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள விரும்புவதில்லை. தமிழர்கள் குழந்தைகளைக் குறைவாகப் பெற்றுக் கொள்வது எதிர்காலத்தில் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று வடக்கின் முன்னாள் விவசாய அமைச்சரும் மாகாணசபை உறுப்பினருமான பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் நடைபெற்ற கோண்டாவில் றோமன் கத்தோலிக்கத் தமிழ்க் கலவன் பாடசாலையின் பரிசளிப்பு  விழாவில்;   கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர்  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்ற பல பாடசாலைகளில் இன்று முப்பது, நாற்பது மாணவர்கள் மாத்திரமே பயின்று கொண்டிருக்கின்றனர். மாணவர்களின் எண்ணிக்கைக் குறைவால் பல பாடசாலைகளை மூடிவிடலாம் என்ற கருத்துகள்கூட முன்வைக்கப்படுகின்றன.

இதற்கு நகரங்களில் உள்ள பிரபலமான பாடசாலைகளில் மாணவர்கள் பயில விரும்புவதையே பலரும் காரணமாகக் கூறி வருகின்றனர். கிராமப் பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்து வருவதற்கு இது ஒரு காரணமாக இருந்தாலும் இதுவே பிரதான காரணம் அல்ல.

யுத்தத்தினால் ஒருபுறம் பெருந்தொகையான தமிழ்மக்கள் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்து போக, இன்னொருபுறம் இனப்பெருக்க வீரியம் உள்ள ஒரு தலைமுறை இளம்சந்ததியும் போரில் அழிந்து போயுள்ளது.  இதனால், எங்களது சனத்தொகை குறைந்து வருகிறது. இருக்கின்ற குடும்பங்கள்கூட பல்வேறு காரணங்களால் இரண்டுக்கு மேல் குழந்தைகளைப் பெற விரும்பவில்லை. இதுவே பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து செல்வதற்கான  பிரதான காரணமாக உள்ளது.

இன்று எண்ணிக்கையே சகல விடயங்களையும் தீர்மானிக்கும் பிரதான சக்தியாக உள்ளது. உண்மையானதா, நீதியானதா, சரியானதா, பிழையானதா என்று பார்க்காமல் பொய்க்கும், அநீதிக்கும், பிழையான விடயங்களுக்கும் பெரும்பான்மைப் பலம் இருந்தால் அது பெரு வெற்றி பெற்று விடுகிறது. தமிழ்மக்கள் குழந்தைகளை அதிகளவில் பெற்றுக் கொள்வதில் அக்கறை காட்டாது விட்டால் விரைவில் இலங்கைத் தீவில் சிறுபான்மையிலும் சிறுபான்மையாகத் தமிழினம் மாற வேண்டிய அவலநிலை ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

11 comments:

  1. கவலைப்பட வேண்டாம்.  இன்னொரு சகோதர இனம் சராசரியைவிட துரிதமாக வளர்ந்து வருகிறது.

    அது இந்நாட்டில் பெரும்பான்மையானவுடன் இம்மண்ணில் இறையாட்சிதான் நடக்கும்.

    அப்போது எவரும் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.  சாந்தி கோலோச்சும்!

    ReplyDelete
  2. முன்னாள் விவசாய அமைச்சருக்கு எத்தனை பிள்ளைகள்?

    ReplyDelete
  3. சிலருக்கு மனநிலை பாதிக்கப்படுவது சமூகத்தில் இயல்பானதே! ஆனால் ஒட்டுமொத்த சமுதாயமுமே ஏதோ வகையில் மனப்பிரள்வுகளுக்குள்ளாகி உள்ளமை முழு நாடுமே கவுன்ஷிலிங் செய்யப்படுவதற்கான கட்டாயத்தில் காணப்படுவது வேதனைக்குறியது!
    தான் மட்டும் தனது இனம் மட்டும், மற்றவனைக்கொள்ள வேண்டும், துரத்த வேண்டும், தமது நிலத்தின் ஒரு துண்னைநேனும் விட்டுக்கொடுக்கக்கூடாது,அதிக குழந்தை பெற்றால் வறுமைவரும்,பெண் கரு என்றால் அபார்ஷன் செய்தல், இறுதியாக இப்போது அதிக குழத்தை பெராவிட்டால் ஈழம் கிடைக்காது போன்ற கோஷங்களெல்லாம் அதன் அறிகுறிகள்! நாட்டின் ஆரோக்யத்தைக்கெடுக்கும் இந்த நோயிலிருந்து விடுபட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
    தனது பக்கத்து வீட்டில் சகோதர இனத்தவன் வாழ்ந்தாலும் மாடி கோபுரம் கட்டினாலும் அது தனது இருப்பை கேள்வியாக்காது என்ற மனோபாவம் வர வேண்டும்! அதுவரை நம்நாடு முன்னேராது

    ReplyDelete
  4. அமைச்சரே.....! இன்ட விடயத்தில் சகோதர சமூகம் நாங்கள் உதவி செய்ய சித்தமாக இருக்குறோம்

    ReplyDelete
    Replies
    1. Dear illyas,you are getting help from Arabic people ,Pakistanis and Sinhalese army for your own needs ..How do you going to Help this matter.You looks so ugly.

      Delete
  5. சாத்தானது புகழ் பாட்டும் இஸ்லாமிய மதம் அதிகரிப்பது போல வெளிப்புறத்தில் தோன்றினாலும், இந்த இறை மறுப்பாளர்கள் அழிவையே சந்திப்பார்கள். இன்று இஸ்லாமிய நாடுகளில் இடம்பெறும் அழிவுகள் இதற்கு சான்றாகும். இறைவனுக்கு முன் ஷைத்தானால் வெற்றி பெற முடியாது.

    ReplyDelete
  6. Only Satans worship statues, man-made gods, idols, etc.

    Only Allah is worship-worthy.

    Allah's creations are not worship-worthy.

    ReplyDelete
  7. Al-Quran - 2:168

    168. மனிதர்களே! பூமியில் உள்ளவற்றில் அனுமதிக்கப்பட்ட தூய்மையானதை உண்ணுங்கள்! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரியாவான்.

    ReplyDelete
  8. @Voice SriLanka: I don't waste time with your ignorant arguments. But however, one thing I can accept that Hindus don't show much interest in converting others to their religion unlike others.That may be because one can follow Hinduism only if he/she truly believe the God.

    ReplyDelete

Powered by Blogger.