Header Ads



"எல்லை நிர்ணயம்" தேசிய ஷூரா சபை, முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் சந்திப்பு


இவ்வருடம் ஜூலை மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், பல்வேறு வாதப் பிரதிவாதங்களுக்கும் இழுபறிகளுக்கும் பின்னர் திருத்தங்களுடன் இச்சட்டமூலம் கடந்த செப்டம்பர் 20 ஆம் திகதி வாக்கெடுப்புக்கு விடப்பட்டு மூன்றில் இரு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.

எனவே, இந்தப் பின்னணியில் தான் மகாண சபைகளுக்கான தேர்தல் தொகுதிகள் எல்லை நிர்ணயம் தொடர்பாக தேசிய ஷுரா சபையானது அதன் 18 அங்கத்துவ அமைப்புக்களில் ஒன்றான அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்துடன் இணைந்து நாடளாவிய ரீதியில் விழிப்பணர்வு மற்றும் ஆய்வுப்பணிகளை குறுகிய கால இடைவெளியில் மேற்கொண்டது

மாகாண சபைத் தொகுதிகளுக்கான எல்லை நிர்ணயம் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்பதற்காக
ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள விஷேட குழுவிடம் சமூகம் சார் கரிசனைகளையும்  முன்மொழிவுகளையும் ஷூரா சபை தொகுத்து  அறிக்கையாக சமர்ப்பிக்கவுள்ளது. இறுதி அறிக்கையை தயாரிக்க முன்னர் முஸ்லிம் பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்கள், ஷூராசபையின் அங்கத்துவ அமைப்புக்களது பிரதிநிதிகள் போன்றோரது கருத்துக்களையும் உள்வாங்க வேண்டும் என்ற நோக்கில் அவர்களுடனான ஒரு சந்திப்பு  7ஆம் திகதி செவ்வாவாய்க்கிழமை மாலை கொழும்பில் இடம்பெற்றது.

புதிய கலப்புத் தேர்தல் முறையின் கீழ் முஸ்லிம்களது பிரதிநிதித்துவம் பாரிய அளவில் குறையலாம் என்ற அச்சம் இருப்பதனால் தேவையான அளவு முஸ்லிம் பிரதிநிதிகளை பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் அல்லது சிறுபான்மை வாக்குகள்  தீர்மானிக்கும் பலத்தை கொண்டிருக்கும் வகையில் முடியுமான இடங்களில்   மாகாண தேர்தல் தொகுதி எல்லைகளை வரைவு செய்தல் போன்ற விடயங்களும் இரட்டை அங்கத்தவர் தொகுதிகள் குறித்தும் கலந்துரையாடலின் பொழுது கவனம் செலுத்தப்பட்டது.

விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் எவ்வாறு எமது பிரதிநிதிகளை தேசியக் கட்சிகளூடாக பெற்றுக் கொள்வது, அவ்வாறு பெறப்படும் உறுப்பினர்களுக்கு நிதி ஒதுக்கீடுகளை எவ்வாறு பெற்றுக் கொள்வது போன்ற இன்னோரன்ன விவகாரங்களும் ஆராயப்பட்டன.

புதிய தேர்தல் முறை, வாக்குச்சீட்டு வடிவமைப்பு, இரட்டை வாக்களிப்பு முறை போன்ற விவகாரங்களை பிறிதொரு அமர்வில் ஆராய்வதாகவும் எல்லோருமாக ஒரு நிலைப்பாட்டை முன்வைப்பது குறித்தும் உடன்பாடுகள் எய்தப்பட்டன.

தொடர்ந்தும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையை கூட்டாக ஆராய்வது பற்றியும் உடன்பாடு காணப்பட்டது.

No comments

Powered by Blogger.