Header Ads



மன்னிப்பு கேட்ட, வட்ஸப் நிறுவனம்

பல்வேறு நாடுகளில் வாட்ஸ் அப் அப்ளிகேஷனில் திடீரென ஏற்பட்ட கோளாறால் அதன் செயல்பாடு தடைப்பட்டது.

 நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ் அப் அப்ளிகேஷன் இன்று மதியம் 1 மணி முதல் சரியாக வேலை செய்யவில்லை. இதனால், பலரும் ட்விட்டர், பேஸ்புக் ஆகியவற்றில் இந்த கோளாறு குறித்து புகார் அளித்தனர்.

இதனையடுத்து #ஙிடச்tண்அணீணீஈணிதீண என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் பிரபலமடைந்துள்ளது. இதன்பிறகு, ஒரு மணிநேரம் கழித்து அந்த கோளாறு சரிசெய்யப்பட்டது.

இந்தச் சம்பவத்தையடுத்து, வாட்ஸ் அப் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. அதில் சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாட்ஸ் அப் அப்பிளிகேசன் சுமார் 1 மணிநேரம் வரை இயங்கவில்லை எனவும், பின்னர் அது சரிசெய்யப்பட்டுவிட்டதாகவும், சேவையில் ஏற்பட்ட இந்த தடங்கலுக்கு மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ள்ளனர்.

ஏற்கெனவே, இந்த பிரச்னை வாட்ஸ் அப்பில் மூன்று முறை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் உலக அளவில் இந்த பிரச்னை பலருக்கு ஏற்பட்டது. மே மாதம் இதே பிரச்னை இரண்டு முறை வந்திருக்கிறது.

No comments

Powered by Blogger.