Header Ads



ஹக்கீமுக்கு, றிசாத் பச்சைக் கொடி

கல்­முனை மாந­கர சபையை நான்கு பிர­தேச சபை­க­ளாகப் பிரிக்க வேண்டும் என்று விடுக்­கப்­பட்­டுள்ள கோரிக்கை தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்­கீ­முடன் கலந்து பேசி ஓர் இணக்­கப்­பாட்­டினை எட்­டு­வ­தற்கு அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரிசாத் பதி­யுதீன் தயா­ராக இருப்­ப­தாக அவ­ரது ஊடகப் பிரிவு தெரி­வித்­துள்­ளது.

அமைச்சர் ரிசாத் பதி­யுதீன் தற்­போது வெளி­நாட்டு விஜ­ய­மொன்­றினை மேற்­கொண்­டி­ருக்கும் நிலையில் அவ­ரது ஊடகப் பிரிவு அமைச்சின் இத் தீர்­மா­னத்தை தெரிவித்தது. அமைச்சர் ரிசாத் பதி­யுதீன் நாடு திரும்­பி­யதும் உட­ன­டி­யாக அமைச்சர் ஹக்­கீ­முடன் பேச்­சு­வார்த்தை நடத்த தயா­ராக இருப்­ப­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கல்­முனை மாந­கர சபையை நான்கு பிர­தேச சபை­க­ளாகப் பிரிக்­கு­மாறு விடுக்­கப்­பட்­டுள்ள கோரிக்­கையில் தீர்­மா­ன­மொன்­றினை மேற்­கொள்­வ­தற்­காக ரிசாத் பதி­யு­தீனும் ரவூப் ஹக்­கீமும் மக்­க­ளுடன் கலந்­து­ரை­யாடி ஒரு இணக்­கப்­பாட்­டுக்கு வர­வேண்டும் என்று மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைசர் முஸ்­தபா வேண்­டுகோள் விடுத்­துள்ள நிலை­யி­லேயே அமைச்சர் ரிசாத் பதி­யு­தீனின் நிலைப்­பாடு வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

தொடர்ந்தும் அமைச்சர் ரிசாத் பதி­யு­தீனின் ஊடகப் பிரிவு தெரி­வித்­துள்­ள­தா­வது;
அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸும் அமைச்சர் ரிசாத் பதி­யு­தீனும் சாய்ந்­த­ம­ரு­துக்கு தனி­யான பிர­தேச சபை உரு­வாக்­கப்­பட வேண்டும் என்­பதில் உறு­தி­யாக இருக்­கி­றது. இதே­வேளை கல்­முனை பிர­தேச மக்­களின் கோரிக்கை தொடர்­பிலும் அமைச்சர் ரவூப் ஹக்­கீ­முடன் கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு ஆயத்­த­மாக இருக்­கி­றது என்று குறிப்­பிட்­டுள்­ளது.

இதே­வேளை இவ்­வி­வ­காரம் தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் நிலைப்பாட்டினை அறிந்துகொள்வதற்கு அவரைப் பலமுறை முயன்றபோதும் அமைச்சரைத் தொடர்புகொள்ள முடியவில்லை.

6 comments:

  1. ரிசாதின் ஊடகதுரை பிரிவினருக்கு வாங்கோழியின் நடனம் மயிலின் நடன தோரனைக்கு ஈடாகுமா ரிசாத் எப்போதும் ரவூபை சந்திக்க முயற்சிக்கின்றார்தாம் ஆனால் முடியவில்லை காரணம் தீயசக்திகளால் முஸ்லிம்காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கத்தை இல்லாமல் ஆக்க அதன் தலைவருக்கு எதிராக உருவாக்கப்பட்டவர்தான் இந்த அவருடன் இந்த ரவூஹக்கீம் என்ன கதைக்கவேண்டும் அவர் இஸ்லாமிய கட்சிகு தலைவர் என்ற வகையில் அந்த பகுதியில் உள்ள முன்னய தற்போதய அமைச்சர்களை சந்தித்து உரையாடி தீர்கமான முடிவுகள் எடுப்பது கடைமை இதனை விட்டு விட்டு வடக்கில் வாழும் ஒரு அமச்சருடன் கதைப்பதால் சாய்ந்தருதில் உள்ளமக்கின் கஸ்டநஸ்டங்களால் இவருக்கு என்ன குறையும் இதில் வியாபார சம்பத்தப்பட் விடயங்கள் இருந்தால் அவருடன் கலந்துரையாடுவதற்கு வாய்புகள் உண்டு ஆனால் ரவூப் ஹகீம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் என்ற வகையில் அவருக்கு இந்த விடயத்தில் பொருப்பு உண்டு அப்படி ரிசாதுடன் கதைத்தால் ஏனைய கட்சிதலைவர்களுடனும் ரவூப்ஹகீம் கலந்துரையாட வேண்டுமென்று உங்களுக்கு உணர்துகின்றேன்.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Kalmunai should be divided according to Muslims aspiration.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete

Powered by Blogger.