Header Ads



முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை முறையிட, ஐ.நாவுக்கு செல்லவேண்டி ஏற்படும்

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை முறையிட ஐ.நாவுக்கு செல்லவேண்டிய நிலை எதிர்காலத்தில் ஏற்படலாமென பிரதி அமைச்சர் பைசல் காசிம் பாராளுமன்றத்தில் எச்சரித்தார்.

அரசாங்கப் படைகள் சிங்களப் படைகள்போன்று செயற்படுவதாக குற்றஞ்சாட்டிய அவர், நல்லாட்சி அரசாங்கம் மீதும், சட்டத்தின் மீதும் நம்பிக்கை வைத்திருப்பதால் முஸ்லிம்கள் பொறுமையுடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.

மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு, நீர்ப்பாசன மற்றும் நீர்வளமூல முகாமைத்துவ அமைச்சு, ஆரம்ப கைத்தொழில் அமைச்சு, மற்றும் கமத்தொழில் அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்: காலி கிந்தோட்டை உள்ளிட்ட ஆறு பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் முஸ்லிம்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இனங்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்த நல்லாட்சி அரசாங்கம் எதிர்பார்த்திருக்கும் சூழ்நிலையில் இவ்வாறான துன்பியல் சம்பவங்கள் முஸ்லிம் மக்களுக்கு ஏமாற்றமளிக்கின்றன. சட்டம், ஒழுங்கை நடைமுறைப்படுத்தி இனங்களுக்கிடையில் ஒற்றுமையை கட்டியெழுப்ப வேண்டும். முஸ்லிம்கள் நல்லாட்சி அரசாங்கத்தின் மீதும், சட்டத்தின் மீதும் நம்பிக்கை வைத்திருப்பதால் பொறுமையுடன் இருக்கின்றனர். இவர்களின் நம்பிக்கையை வீணடிக்காது இனவாத செயற்பாடுகளுக்கு அரசாங்கம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். வன்முறையுடன் தொடர்புடையோர்களுக்கு சட்டத்தின் மூலம் தண்டனை வழங்க வேண்டும்.

இவ்வாறான சம்பவங்கள் மூலம் நாட்டில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லையென்ற செய்தி சர்வதேசத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றது. முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இல்லையென்பதை ஐக்கிய நாடுகள் சபைக்கு நாம் இதுவரை சொல்லவில்லை. இதுபோன்ற வன்முறைகள் தொடர்ந்தால் முஸ்லிம்களும் எதிர்காலத்தில் ஐக்கிய நாடுகள் சபையை நாடவேண்டியிருக்கும் என நம்புகின்றேன்.

பாதுகாப்பு வழங்கவேண்டிய அதிகாரிகள் முன்னிலையில் மக்கள் தாக்கப்பட்டும், சொத்துக்கள் சூறையாடப்பட்டுமுள்ளன. இதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம். முஸ்லிம்களுக்கு எதிரான பேரினவாத தாக்குதல்கள் முறையான திட்டங்களுடன், பொதுத்தன்மையுடன் மேற்கொள்ளப்படுகின்றன.

3 comments:

  1. நாம் பொறுமையாக இருக்கவில்லை - மாற்றமாக உண்மையில் பொறுமையை இழந்திருக்கிறோம்.

    இனியும் தாமதிப்பதில் பயனேதும் இல்லை. ஐ.நா முதல் அனைத்து நிலைகளிலும் நாடுகளிலும் - அடக்குமுறைக்கான தகுந்த ஆதாரங்களுடன் முறையிடுவதைத் தவிர இனியொரு மார்க்கம் இல்லை.

    சிவில் சமூகம் சிந்திக்கவேன்டிய தருணம் இது.

    ReplyDelete
  2. விசுவாசமான நக்குநாய்களின் வெற்றுப்பேச்சுகளின் தந்திரம் ஆனால் மக்களுக்கு இந்த நரிகளுக்கு தக்க பாடம் புகட்ட தயாராக தொடங்கிவிட்டார்கள் இனிமேல் ஆப்புத்தான் அல்லாஹுஅக்பர்

    ReplyDelete
  3. To do that you must get out of the Yahapalanaya.

    ReplyDelete

Powered by Blogger.