Header Ads



சுனாமி என வதந்தி, மக்கள் அச்சமடையத் தேவையில்லை, ஓரிரு தினங்களில் நிலைமை சரியாகிவிடும்

தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை குறித்து மக்கள் அனாவசியமாக அச்சமடையத் தேவையில்லை என, தேசிய பேரிடர் முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

“தற்போதைய சூழ்நிலை தாழமுக்கத்தால் ஏற்பட்டிருக்கிறது. இது இன்னும் ஓரிரு தினங்களில் சரியாகிவிடும். எனினும் மக்களைக் குழப்பும் வகையில், சுனாமி ஏற்படலாம், புயல் வீசப்போகிறது என்றெல்லாம் சிலர் வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். அவை குறித்து மக்கள் அச்சமடையத் தேவையில்லை.

“இதுவரை சுனாமி ஏற்படுவதற்கான அறிகுறி எதுவும் பதிவாகவில்லை. மேலும், தாழமுக்கம் புயலாக மாறும் வாய்ப்பும் இல்லை. காலநிலை மாற்றங்கள் குறித்து வானிலை அவதான நிலையம் தொடர்ச்சியாக அறிவிப்புகளை வெளியிடும். எனவே மக்கள் வீணே பயம் கொள்ள வேண்டியதில்லை.”

இவ்வாறு அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.