Header Ads



இது அல்ல, பௌத்த மதம் - இலங்கையர்கள் பற்றி, பிரிட்டன் பெண் வேதனை


இலங்கையில் இருந்து நாடு கடத்தப்பட்ட பிரித்தானிய பெண்ணை பேஸ்புக்கில் கடுமையாக விமர்சித்த காரணத்தினால் அவர் பேஸ்புக்கை விட்டு வெளியேறியுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புத்தர் உருவத்தை கையில் பச்சை குத்திய குற்றச்சாட்டிற்காக 41 வயதான நயோமி கொல்மன் என்பவர் நாடு கடத்தப்பட்டார்.

2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கையில் நான்கு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தமைக்காக கடந்த புதன்கிழமை, அவருக்கு நஷ்டஈடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

பௌத்தரான பிரித்தானிய பெண் மீண்டும் தான் இலங்கைக்கு செல்லப் போவதில்லை என குறிப்பிட்டிருந்தார்.

அவர் நாடு கடத்தப்பட்ட பின்னர் தான் உயிரிழந்து விடுவதாகவும், நரகத்தில் ஏரியப் போவதாகவும், அவருக்கு இணையம் மூலம் செய்தி அனுப்பப்பட்டதாக நயோமி தெரிவித்துள்ளார்.

பௌத்த மதத்திற்காக தான் இது போன்ற ஒன்றையும் அனுபவித்ததில்லை. பௌத்த வெறியர்களிடம் தான் அனுப்பப்பட்டதாக எண்ணியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தான் உயிரிழக்க வேண்டும் எனவும் நரகத்தில் தீயில் எரிய வேண்டும் எனவும் சமூக வலைத்தளங்களில் எழுதப்பட்டுள்ளது.

தான் பல வாரங்கள் சமூக வலைத்தளங்களை விட்டு முழுமையாக விலகியதாகவும், தற்போது தான் பெயரை மாற்றியே வலைத்தளங்களை பயன்படுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தான் கடந்த 10 வருடங்களாக பௌத்த மதத்தில் உள்ளதாகவும், இது அல்ல பௌத்த மதம் கற்பிக்கின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.