Header Ads



அமைதியான பூமியில் வாழ, எங்களுக்கு உரிமை இல்லையா..?


கிரீஸ் அகதிகள் முகாமில் வசித்து வரும் தாய் ஒருவர் ஜேர்மனிக்கு செல்ல முயன்ற சம்பவம் குறித்து கண்ணீர் மல்க விவரித்துள்ளார்.

கிரீசின் ஏதேன்ஸில் உள்ள Malakasa அகதிகள் முகாமில் வசித்து வரும் தம்பதி Lateef- Nazifa, ஆப்கானை சேர்ந்த இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கர்ப்பமாக இருந்த Nazifa தனது குழந்தை ஜேர்மனியில் பிறக்க வேண்டும் என்றும், புகலிடம் கோரி ஜேர்மனிக்கு செல்லவும் ஆசைப்பட்டுள்ளார்.

இதனையடுத்து நாடு கடத்தும் நபர்களை தொடர்பு கொள்கையில், இருவருக்கு 6000 யூரோக்கள் செலவாகும் என கூறியுள்ளனர்.

ஆனால் இவர்களிடமோ ஒருவர் செல்வதற்கான பணம் மட்டுமே இருந்துள்ளது, எனவே கனத்த மனத்துடன் இருகுழந்தைகள், கணவரை விட்டுவிட்டு Nazifa ஜேர்மனி செல்வதற்கு முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து Nazifa, அது என் வாழ்வில் மிகவும் சோகமான தருணம், குழந்தைகளை விட்டு விட்டு தனியாக செல்லப்போகிறேன் என்று நினைத்த போது கண்கலங்கினேன்.

ஒருவழியாக பயணம் செய்ய முடிவெடுத்து செல்லும் வழி முழுவதும் அழுது கொண்டே தான் இருந்தேன், உலகமே இடிந்து என் தலையில் விழுந்தது போன்று இருந்தது.

ஜேர்மனிக்கு வந்த பின்னர் நாடு கடத்தும் நபர்கள் எனக்கு ஆடை உட்பட பொருட்களை வாங்கி கொடுத்தனர்.

இரண்டாவது முறையாக பொலிசார் விசாரித்த போது சிக்கிக் கொண்டேன், ஏனெனில் கடத்தல்காரர்கள் போலி ஐடியில் தான் என்னை அனுப்பியிருந்தனர்.

தன் பெயரை கேட்ட அவர்கள் சந்தேகமடைந்தனர், அதன் பின் விசாரித்து, மீண்டும் இங்கு வரக்கூடாது என்று கூறி அனுப்பிவிட்டனர்.

மறுபடியும் Malakasa அகதிகள் முகாமிலேயே தங்கியிருந்து குழந்தையை பெற்றெடுத்தேன், மறுபடியும் ஆறு மாதங்கள் கழிந்த பின்னர் என் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக மீண்டும் ஜேர்மன் செல்ல முடிவெடுத்து இங்கு வந்தேன்.

அமைதியான பூமியில் வாழ எங்களுக்கு உரிமை இல்லையா? என கண்ணீர் மல்க கேட்டுள்ளார்.

அகதி அந்தஸ்துக்காக இன்னும் ஜேர்மனியில் காத்துக் கொண்டிருக்கிறார் Nazifa. இதற்கிடையே கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக அகதிகளை மீண்டும் கிரீசுக்கு அனுப்பு முயற்சியை ஜேர்மனி ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.