Header Ads



ஒட்டுமொத்த ஆசியாவுக்கும் இலங்கையிலிருந்தே, எரிபொருளை விநியோகிக்க முடியும்

திருகோணமலை எண்ணெய் குதங்களை முறையாகப் பயன்படுத்தினால் ஒட்டுமொத்த ஆசியாவுக்கும் இலங்கையிலிருந்தே எரிபொருளை விநியோகிக்க முடியும் என விசேட மறுசீரமைப்பு அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார். எனினும், இதுதொடர்பில் அரசு கவனம் செலுத்தாது இருப்பதே கவலையளிக்கிறது.“ என்றும் அவர் கூட்டிக்காட்டினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார் அவர் மேலும் தெரிவிக்கையில், 

நாட்டில் ஏற்பட்ட பெற்றோல் நெருக்கடி நிலைமை தொடர்பாக ஆராய்வதற்காக நான் உள்ளடங்களாக அமைச்சரவை உப குழுவொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அமைக்கப்பட்டிருந்தது.

அதற்கிணங்க நாம் இதுகுறித்து ஆராய்ந்து ஜனாதிபதியிடம் அறிக்கையும் சமர்ப்பித்துள்ளோம். இதன்போது பெற்றோல் தட்டுப்பாட்டுக்கு காரணமான சில விடயங்களையும் எம்மால் கண்டுபிடிக்க முடிந்தது. குறிப்பாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தினால் கொண்டுவரப்பட்ட 20,000 மெற்றிக் தொன் எரிபொருள் தரமற்ற காரணத்தினால் திருப்பியனுப்பப்பட்ட போதும் அதற்கான மாற்று எரிபொருளை மீண்டும் கொண்டுவருவதில் ஏற்பட்டிருந்த தாமதம், பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் கொண்டுவரப்பட்ட எரிபொருள் கப்பலில் ஏற்பட்ட தாமதம், சுத்திகரிப்பு நிலையத்தில் உபகரணங்களில் ஏற்பட்ட பழுதுகள் என்பன தான் இவற்றுக்கு காரணம் என கண்டறிந்துள்ளோம்.

அதேநேரம், இவ்வாறான நிலைமை நாட்டில் திடீரென ஏற்படும்போது வைத்துக்கொள்ள வேண்டிய எரிபொருளையும் அதிகாரிகள் களஞ்சியப்படுத்தியிருக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. ஆயிரக்கணக்கான ஊழியர்கள் இருந்த இடத்தில் இவ்வாறாக எரிபொருளை முகாமைத்துவம் செய்ய முடியாது போனமை ஏன் என்று தான் விசாரணை நடத்த வேண்டும் என்று எமது குழு சிபாரிசு செய்துள்ளது.“ எனக் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.