Header Ads



அமைச்சரின் மூளையில் இருக்கும் பிரச்சினை

பெருநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கு கடந்த வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி சரியான முறையில் செலவு செய்யப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இப்படியான அமைச்சு ஒன்றுக்கு நிதியமைச்சர் மேலும் பணத்தை ஒதுக்கியது, அமைச்சரின் மூளையில் இருக்கும் பிரச்சினை காரணமாக இருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் அலுவலகத்தில் இன்று -13- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு பெருநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட செலவுகளுக்கான நிதியில் 74.2 வீதமும் மூலதன நிதி ஒதுக்கீட்டில் 42.5 வீதம் மாத்திரமே செலவிடப்பட்டுள்ளது.

அரசாங்கம் நிதி நெருக்கடியை எதிர்நோக்கி வரும் நிலையில் கடந்த வருடத்தை விட இந்த வருடம் 12 பில்லியன் ரூபா மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. 

இது சம்பந்தமாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மகிழ்ச்சியடைய வேண்டும் எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.