November 20, 2017

ஜிந்தோட்ட முஸ்லிம்களின், கண்ணீர் வாக்குமூலம் (நேரடி றிப்போர்ட்)


-MBM.Fairooz-

பொலி­ஸாரும் விசேட அதி­ரடிப் படை­யி­னரும் பார்த்­தி­ருக்க, அவர்கள் முன்­னி­லை­யி­லேயே குண்­டர்கள் தமது வீடு­களைத் தாக்­கி­ய­தாகக் குற்­றம்­சாட்டும் கிந்­தோட்டை பிர­தேச முஸ்லிம் மக்கள்,  பிர­தே­சத்தில் பதற்­ற­மான சூழ்­நிலை நில­விய நிலையில் பாது­காப்புப் படை­யி­னரை பின்­வாங்கச் செய்­து­விட்டே இந்தத் தாக்­குதல் முஸ்­லிம்கள் மீது  நடத்­தப்­பட்­ட­தா­கவும் அவ்­வா­றெனில் இதன் பின்­ன­ணியில் செயற்­பட்ட மறை­கரம் யார் என்­பதை கண்­ட­றிந்து அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்­கின்­றனர்.

காலி மாவட்­டத்தின் கிந்­தோட்டை பிர­தே­சத்தில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை இரவு இடம்­பெற்ற வன்­முறைச் சம்­ப­வங்­களைத் தொடர்ந்து அப் பகு­திக்கு விஜயம் செய்த பிர­தமர், அமைச்­சர்கள், பொலிஸ் மா அதிபர், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஆகி­யோ­ரி­டமே பாதிக்­கப்­பட்ட மக்கள் நேரில் இந்தக் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­தனர்.

இதன்­போது இப் பிர­தேச மக்கள் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,  இந்த தாக்­கு­தல்­களின் பின்­ன­ணியில் அர­சி­யல்­வா­தி­களும் பாது­காப்பு உய­ர­தி­கா­ரி­களும் பௌத்த மத குருக்களும் இருப்­ப­தா­கவே நாம் நம்­பு­கிறோம். இப் பகு­தியில் கடந்த சில நாட்­க­ளாக இடம்­பெற்ற சம்­ப­வங்கள் கார­ண­மாக நாம் அச்­சத்­தி­லேயே காலத்தைக் கடத்­தினோம்.  பிர­தே­சத்தில் பதற்றம் நில­வி­யதைத் தொடர்ந்து வியா­ழக்­கி­ழமை முதல்  பொலி­சாரும் விசேட அதி­ரடிப் படை­யி­னரும் பாது­காப்புக் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தனர். இதனால் முஸ்­லிம்கள் பாது­காப்பு உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக நம்­பினர்.

எனினும், வியா­ழக்­கி­ழமை மாலை பொலி­சாரும் விசேட அதி­ரடிப் படை­யி­னரும் திருப்­பி­ய­ழைக்­கப்­பட்­டனர். ஓரிரு சந்­தி­களில் மாத்­திரம் சிலர் கட­மையில் இருந்­தனர். இந் நிலை­யி­லேயே இரவு 7.30 மணி­ய­ளவில் சுமார் 200 பேர­டங்­கிய குண்­டர்கள் கிந்­தோட்­டை­யின் பல பகு­தி­க­ளுக்­குள்ளும் புகுந்து முஸ்­லிம்­களின் வீடு­களை இலக்கு வைத்து தாக்­குதல் நடத்­தினர்.

நாம் இவர்­களைத் தடுத்து நிறுத்தி எமது வீடு­க­ளையும் வர்த்­தக நிலை­யங்­க­ளையும் பாது­காக்­கு­மாறு கெஞ்சிக் கேட்டுக் கொண்ட போதிலும் பொலி­சாரோ இரா­ணு­வத்­தி­னரோ தமது கட­மையைச் செய்ய முன்­வ­ராது வேடிக்கை பார்த்­தனர். சுமார் இரண்டு மணித்­தி­யா­லங்­க­ளுக்கும் மேலாக எமது பகு­தி­களில், ஒவ்­வொரு வீடு­க­ளிலும் இரு­பது நிமி­டங்­க­ளுக்கும் மேல் தரித்து நின்று தாக்­குதல் நடத்­தினர்.

தாக்­குதல் நடத்த வந்­த­வர்­களின் பிர­தான நோக்கம் எமது பணத்­தையும் நகை­க­ளையும் பெறு­ம­தி­மிக்க பொருட்­க­ளையும் கொள்­ளை­ய­டிப்­ப­தாகும். நாங்கள் எங்கள் வீடு­க­ளுக்குள் உயி­ருக்கு அஞ்சி மறைந்­தி­ருந்த நிலையில் எங்கள் கண் முன்­னா­லேயே கொள்­ளை­ய­டித்துச் சென்­றனர். தள­பா­டங்­களை உடைத்து நொறுக்­கினர். வாக­னங்­களைத் தீயிட்டுக் கொளுத்­தினர். சில­ரது கழுத்தில் கத்­தி­களை வைத்து கொல்லப் போவ­தாக அச்­சு­றுத்­தினர்.

இத்­தனை சம்­ப­வங்கள் நடந்த போதிலும் விசேட அதி­ரடிப் படை­யி­னரும் பொலி­சாரும் வேடிக்கை பார்த்­த­மையும் பதற்றமான சூழல் நிலவிய போதிலும் திடீரென பாதுகாப்பு படையினர் வாபஸ் பெறப்பட்டமையும் எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கிந்தோட்டை பிரதேச முஸ்லிம்கள் மேலும் வேண்டுகோள் விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment