Header Ads



எல்லை மீள்நிர்ணய வர்த்தமானியை செல்லுப்படியற்றதாகக் கோரி, நீதிமன்றில் இன்று மனுத்தாக்கல்

எல்லை மீள்நிர்ணய வர்த்தமானியை செல்லுப்படியற்றதாகக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு,கண்டி,ஹாலிஎல,மாத்தறை மற்றும் எம்பிலிபிட்டி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 6 பேரினால் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனுவின் பிரதிவாதிகளாக உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் பைஸர் முஸ்தபா மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

குறித்த உள்ளுராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணய விடயங்களுக்காக நியமிக்கப்பட்ட உப குழுவின் பரிந்துரைக்கு அப்பால்   அமைச்சரினால் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உபகுழுவின் பரிந்துரைகளை மீறி வர்த்தமானியை வெளியிடுவதற்கு அமைச்சருக்கு அதிகாரம் இல்லை என்றும் மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே குறித்த வர்த்தமானியை செல்லுபடியற்றதாகக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவினை நாளைய தினம்(16)  மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினால் ஆராய்ந்து பார்ப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.