Header Ads



கிந்­தோட்டை முஸ்­லிம்கள் புறக்கணிப்பு, நஷ்டயீடும் இல்லை, அதிகாரிகளும் அசமந்தம்

காலி மாவட்­டத்தின் கிந்­தோட்டை பிர­தே­சத்தில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை இரவு இடம்­பெற்ற அசம்­பா­வி­தங்­களைத் தொடர்ந்து கடந்த ஓரிரு தினங்­க­ளாக அங்கு அமைதி திரும்­பி­யுள்­ள­தாக பிர­தேச மக்கள் தெரி­விக்­கின்­றனர். எனினும் அப் பிர­தே­சத்தில் தொடர்ந்தும் பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. 

இந்த அசம்­பா­வி­தங்கள் கார­ண­மாக 5 பேர் காய­ம­டைந்து வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­ட­துடன் 22 பேர் கைது செய்­யப்­பட்டு எதிர்­வரும் 30 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

அத்­துடன் வன்­மு­றைகள் கார­ண­மாக 81 வீடு­களும் 18 வர்த்­தக நிலை­யங்­க­ளும் சேத­ம­டைந்­துள்­ளன. மேலும் 6 முச்­சக்­கர வண்­டி­களும் ஒரு லொறியும் வேன் ஒன்றும்  8 மோட்டார் சைக்­கிள்­களும் தாக்­கியும் எரித்தும் சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. நான்கு பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­பட்­டுள்­ள­துடன்  8 திருட்டு சம்­ப­வங்­களும் பதி­வா­கி­யுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்­டுள்ள புள்­ளி­வி­ப­ரங்­களில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையில் கிந்­தோட்டை பிர­தே­சத்தில் முஸ்­லிம்கள் எதிர்­கொண்­டுள்ள நெருக்­க­டி­க­ளுக்கு கூட்­டாக முகங்­கொ­டுக்கும் வகையில் கிந்­தோட்டை பிர­தே­சத்தை மையப்­ப­டுத்தி அனர்த்த முகா­மைத்­துவ நிலையம் ஒன்று அங்­கு­ரார்ப்­பணம் செய்­யப்­பட்­டுள்­ளது. இதன் மூல­மாக முஸ்­லிம்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள இழப்­பு­களை முறை­யாக பதிவு செய்து ஆவ­ணப்­ப­டுத்­து­வ­தற்­கான முதற்­கட்ட நட­வ­டிக்­கைகள் பூர­ணப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக அமைப்பின் உப தலைவர் அஷ்ஷெய்க் ஹிபிஷி (கபூரி) 'விடி­வெள்ளி'க்குத் தெரி­வித்தார்.

கிந்­தோட்டை பிர­தே­சத்தில் கள நிலை­வ­ரங்கள் மற்றும் தமது அமைப்பின் நட­வ­டிக்­கைகள் தொடர்பில் அவர் மேலும் கருத்து வெளி­யி­டு­கையில், அசம்­பா­வி­தங்­களால் முஸ்­லிம்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள இழப்­புகள் தொடர்­பான பதி­வு­களை நாம் மேற்­கொண்­டுள்ளோம்.

எமது அமைப்பின் உறுப்­பி­னர்கள் பாதிக்­கப்­பட்ட வீடு­க­ளுக்கு நேர­டி­யாகச் சென்று சேத விப­ரங்­களை பதிவு செய்­துள்­ளனர். இதே­போன்று அகில லங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் சமூக சேவைப் பிரி­வி­ன­ருக்கும் இந்த விப­ரங்­களை கைய­ளித்­துள்ளோம்.

பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு அர­சாங்­கத்­தினால் நஷ்­ட­யீடு வழங்­கப்­படும் என பிர­த­மரும் அமைச்­சர்­களும் உறு­தி­ய­ளித்­துள்ள போதிலும் இது­வரை கிராம சேவ­கர்­களோ, பிர­தேச செய­லக அதி­கா­ரி­களோ பாதிக்­கப்­பட்ட இடங்­களைப் பார்­வை­யி­டவோ சேத விப­ரங்­களைப் பதி­யவோ இல்லை. மக்கள் அதி­கா­ரி­களின் வரு­கைக்­காக காத்­தி­ருக்­கி­றார்கள்.

இதே­வேளை பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு சட்ட உத­வி­களை வழங்கும் நோக்கில் சட்­டத்­த­ர­ணிகள் குழு­வி­னரும் எமது பிர­தே­சத்­துக்கு வருகை தரு­வ­தாக உறு­தி­ய­ளித்­துள்­ளனர். 

நாம் கிந்­தோட்டை பிர­தேச அகில இலங்கை ஜம்­இய்­யதுல்  உல­மா­வுடன் இணைந்து  தொடர்ச்­சி­யாக கலந்­து­ரை­யா­டல்­க­ளையும் திட்­ட­மிடல் அமர்­வு­க­ளையும் நடாத்தி வரு­கிறோம். 

பிர­தே­சத்தில் தற்­போது அமைதி நில­வு­கி­றது.எனினும் இரவு வேளை­களில் பாது­காப்பு அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

துர­திஷ்­ட­வ­ச­மாக மக்கள் மத்­தியில் இன்­னமும் வதந்­திகள் பர­விய வண்­ணமே உள்­ளன.  இதனால் இரவு வேளை­களில் மக்கள் மத்­தியில் சற்று அச்சம் நில­வு­வ­தையும் காண முடி­கி­றது என்றும் அவர் மேலும் குறிப்­பிட்டார்.

No comments

Powered by Blogger.