Header Ads



கோத்தபாய தப்பிப்பு - சட்டமா அதிபர் திணைக்களம் கவலை

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக பொதுச் சொத்து துஸ்பிரயோக சட்டத்தின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு இடைக்கால தடையுத்தரவு விதிக்கப்பட்டமை ஒரு தலைப்பட்சமான தீர்மானம் என சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தில்ருக்ஸி டயஸ் நேற்று தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் தமக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடாது என தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோத்தபாய ராஜபக்ச சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றில் கோரியிருந்தார்.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் 6ம் திகதி வரையில் சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடாது என இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.

கோத்தபாய தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ள நிலையில், உத்தரவு பிறப்பிப்பதனை காலம் தாழ்த்த முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மனுதாரரான கோதபாய ராஜக்சவின் சட்டத்தரணிகள் ஒருபக்கச்சார்பாக முன்வைத்த காரணிகளின் அடிப்படையில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சட்ட மா அதிபருக்கு அழைப்பாணை பிறப்பிக்காது, சட்ட மா அதிபரிடம் விளக்கம் கோராது இந்த இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த தடையுத்தரவு தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களம் பத்திரிகை வாயிலாகவே அறிந்து கொண்டது.

சட்ட மா அதிபர் அல்லது தொடர்புடையவர்களிடம் விளக்கம் கோராது இவ்வாறு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை சட்டத்திற்கு முரணானது என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தில்ருக்ஸி டயஸ் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. All this is happening because of Grama Sevaka.

    ReplyDelete
    Replies
    1. However, Grama Sevaka is many times better than racists and their followers.

      Delete

Powered by Blogger.