Header Ads



கோட்டாபயவை கைதுசெய்ய பச்சைக் கொடி

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ வெகு விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கடந்த அரசாங்க காலத்தில் மெதமுலன பிரதேசத்தில் டீ.ஏ. ராஜபக்‌ஷ அருங்காட்சியகம் மற்றும் நினைவகம் அமைக்கப்பட்ட போது அரச நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட உள்ளார். 

இந்த திட்டத்தை இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்திற்கு கையகப்படுத்தி அரசாங்கத்திற்கு சுமார் 90 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்தப்பட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 90 மில்லியன் ரூபா நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டின் படி பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கோட்டாபய ராஜபக்‌ஷ உள்ளிட்ட சம்பந்தப்பட சில தரப்பினரிடம் இதற்கு முன்னர் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

குறைந்த விலையில் நிர்மாணிப்பது அரசாங்கத்திற்கு பிரச்சினையை எற்படுத்தியிருப்பதாகவும், அதை இந்த அரசாங்கம் தவறாக பயன்படுத்தியதாக கருதுகின்றது என்றும் கொட்டாபய ராஜபக்‌ஷ இதற்கு முன்னர் கூறியிருந்தார். 

சம்பவத்தில் கோட்டாபய ராஜபக்‌ஷவை கைது செய்வதற்கான அனுமதியை சட்ட மா அதிபரும் வழங்கியிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2 comments:

  1. நல்லாட்சி வந்ததிலிருந்து இதை கேட்டு கேட்டு புளிச்சிடப்பா

    ReplyDelete

Powered by Blogger.