Header Ads



பைசருக்கு எதிரான, பிரேணை தோற்கடிக்கப்படும்

உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு எதிராக கொண்டுவரும் நம்பிக்கையில்லா பிரேரணையில் அவர் வெற்றிபெறுவது உறுதி என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டுமென்பதிலும் அது தொடர்பான எல்லை மீள் நிர்ணயம் மற்றும் வர்த்தமானி வெளியீடு உள்ளிட்ட நடவடிக்கைகளிலும் அவர் மிக நேர்மையாகவும் வெளிப்படையாகவும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டுள்ளார் என தெரிவித்த அமைச்சர் இதற்கிணங்க எத்தகைய நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டாலும் அவர் அதை வெற்றிகொள்வார் என்றும் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட செய்தியாளர் மாநாடொன்று கட்சி தலைமையகத்தில் இடம்பெற்றது. இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளேயும் கலந்து கொண்ட இச்செய்தியாளர் மாநாட்டில் மேலும் விளக்கமளித்த அமைச்சர் மஹிந்த அமரவீர, அமைச்சர் பைசல் முஸ்தபாவுக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணை அநாவசியமானது.

உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது முதல் தொடர்ச்சியாக அவர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார். இந்த வகையில் அவருக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அவருக்கு ஆதரவாகவே செயற்படும்.

இதன் போது ஊடகவியலாளர் ஒருவர் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் பிரதமர கொறடா அநுரகுமார திசாநாயக்க முன்வைத்த குற்றச்சாட்டுத் தொடர்பில் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் மஹிந்த அமரவீர அந்தக் குற்றச்சாட்டை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம். அநுரகுமார திசாநாயக்க தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தலுக்காக பேசிய பேச்சு அது.

எந்த சட்டமூலத்துக்கு எதிராகவும் எவரும் நீதிமன்றம் செல்ல முடியும். எனினும் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரும் அளவிற்கு அவர் நம்பிக்கையற்றவராக செயற்படவில்லை என்பதை உறுதியாக கூறமுடியும். எதிர்வரும் 04ம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களான நாமும் நீதிமன்றத்திற்குச் செல்வோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (ஸ)

No comments

Powered by Blogger.