Header Ads



கிரிக்கெட் போட்­டியில் வெற்­றி­பெற, ஆன்­மீ­க­வா­தி­களின் ஆசீர்­வாதம் மட்டும் போதாது - சந்­திமால் அதிரடி

கிரிக்கெட் போட்­டியில் வெற்­றி­பெற ஆன்­மீ­க­வா­தி­களின் ஆசீர்­வாதம் மட்டும் போதாது திற­மையும் வேண்டும் என்று இலங்கை டெஸ்ட் அணித் தலைவர் தினேஷ் சந்­திமால் தெரி­வித்தார்.

ஐக்­கிய அரபு எமி­ரேட்­ஸுக்கு சென்று பாகிஸ்­தா­னுடன் விளை­யா­டிய இலங்கை இரண்டு போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழு­மை­யாக வென்று சாதித்­தது.

இந்தத் டெஸ்ட் தொடரை சந்­திமால் தலை­மை­யி­லான இலங்கை அணி வெல்­வ­தற்கு எனது ஆசீர்­வா­தமே காரணம் என்று பெண் ஆன்­மீ­க­வாதி ஒருவர் பேஸ்­புக்கில் பதி­வேற்­றிய படம் ஒன்று பலத்த சர்ச்­சையை உருவாக்­கி­யது.

இந்­நி­லையில் நேற்று இலங்கைக் கிரிக்கெட் நிறு­வனக் கேட்போர் கூடத்தில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போது சந்­தி­மா­லிடம் இது­கு­றித்து கேள்­விகள் எழுப்­பப்­பட்­டன.

அதில் டெஸ்ட் தொட­ருக்கு உங்­க­ளுக்கு கிடைத்த ஆசீர்­வாதம் ஒருநாள் தொட­ருக்கு கிடைக்­க­வில்­லையா என்று கேள்வி எழுப்­பப்பட்­டது. அதற்கு பதி­ல­ளித்த சந்­திமால், நான் ஆசீர்­வாதம் பெற்­றது என்­னு­டைய தனிப்­பட்ட விடயம். எந்த மதகுரு­வாக இருந்­தாலும் நான் ஆசீர்­வாதம் பெறத் தயா­ரா­கவே இருக்­கிறேன். அதற்­காக ஆசீர்­வா­தத்தை மட்டும் வைத்­துக்­கொண்டு போட்­டியில் வெற்­றி­பெற்­று­விட முடி­யாது. அவை எல்­லா­வற்­றையும் விட திற­மைதான் முக்­கியம் என்று ஆன்­மீ­கத்தை நாடிய சர்ச்­சைக்கு முற்றுப் புள்­ளி­வைத்தார் சந்­திமால்.

இந்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் இலங்கை கிரிக்­கெட்டின் மூன்று வகை­யான போட்­டி­களுக்கும் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த மூன்று தலை­வர்­களும் கலந்­து­கொண்­டி­ருந்­தனர். இதில் சந்­திமால் மட்­டுமே வெற்றித் தலை­வ­ராக அங்கு பிர­தான மேசையில் அமர்ந்­தி­ருந்தார்.

காரணம் டெஸ்ட் அணித் தலைவர், பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான டெஸ்ட் தொடரை முழு­மை­யாக வென்று, அத்­தோடு இலங்கை அணி விளை­யா­டிய முத­லா­வது பக­லி­ரவு டெஸ்­டையும் வெற்­றி­பெற்று சாதனை படைத்­தது.

ஆனாலும் ஒருநாள் அணித் தலைவர் தரங்­கவும், இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் அணித் தலைவர் திஸர பெரே­ராவும் தலை­வர்களாக சோபிக்­க­வில்லை. தொடர் தோல்­வி­ கு­றித்து கருத்து தெரி­வித்த உபுல் தரங்க, எமது தோல்விக்கு முக்கிய காரணம் நான் உட்பட அனைத்து துடுப்பாட்ட வீரர்களும்தான்.

இந்த தோல்வியிலிருந்து நாம் மீண்டு வர வேண்டும் என்று தெரிவித்தார். திஸர பெரேரா பேசுகையில், இளம் அணியொன்றை எனக்கு தந்திருந்தார்கள். 

ஆனால் அவர்கள் சிறப்பான ஆதரவைக் கொடுத்தனர். அவர்களை இன்னும் பயிற்சியளித்து எடுத்தால் சிறந்த வீரர்களாக உருவெடுப்பார்கள் என்றார். அடுத்து எமது நோக்கமெல்லாமல் இந்தியாவுக்கு எதிரான தொடர் மீதுதான் என்று பேசி முடித்தார் உபுல் தரங்க.

No comments

Powered by Blogger.