Header Ads



கட்டார் நாட்டுடன் துருக்கி, ஈரான் ஒப்பந்தம்


அண்டைய அரபு நாடுகளின் முற்றுகையில் சிக்கி இருக்கும் கட்டார் வர்த்தக உறவுகளை அதிகரிக்கும் நோக்கில் ஈரான் மற்றும் துருக்கியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த ஒப்பந்தத்தின்படி மூன்று நாடுகளுக்கும் இடையிலான பொருட்களின் போக்குவரத்திற்கு கூட்டு செயற்பாட்டு குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது. மூன்று நாடுகளுக்கும் இடையில பொருட்கள் விநியோகிப்பதில் உள்ள தடங்கல்கள் அகற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஷியா ஆதிக்க சக்தியான ஈரானுடனான கட்டாரின் உறவு, சுன்னி ஆட்சி நிலவும் சவூதி அரேபியாவின் கோபத்தை தூண்டிய காரணிகளில் ஒன்றாகும். சவூதி, பஹ்ரைன், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் எகிப்து கடந்த ஜுன் மாதம் கட்டாருடனான உறவை துண்டித்தது. கட்டார் தீவிரவாதத்திற்கு உதவுவதாகவும் ஈரானுடன உறவை வளர்ப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

இந்த பிரச்சினை ஆரம்பித்தது தொடக்கம் ஈரான் மற்றும் துருக்கி நாடுகள் கட்டாருடனான உறவை பலப்படுத்தியுள்ளன. கட்டார் தனிமைப்படுத்தப்படுவதை தவிர்க்கும் வகையில் உணவுப் பொருட்களின் ஏற்றுமதியை இந்த இரு நாடுகளும் அதிகரித்துள்ளன. 

7 comments:

  1. முஸ்லிம்களை கூறு போட்டு இரத்தத்தை ஓட்டுவதற்கான ஒப்பந்தம்.
    ஒர்துகான் இரட்ஈ வேடம் போடுகிறார்.

    ReplyDelete
    Replies
    1. I like erdogan.he is the one of the grate man.

      Delete
    2. Iran and Saudi Arabia creating a problem among the Muslims countries

      Delete
    3. Iran and Saudi Arabia creating a problem among the Muslims countries

      Delete
  2. இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.
    (அல்குர்ஆன் : 3:103)

    ReplyDelete
  3. இது ரஹஸ்யமாக இருந்த்தது இப்ப தெளிவு படுத்துறங்க மித விரைவில் இஸ்ரேல் உடனும் செய்வதாக

    இஹ்வானிகள் எங்கே போனார்கள் அவர்களுக்கு சவூதி மட்டும்தான் கண்ணுக்கு தெரியும் ஏனெனில் அவர்களும் மறைமுகமாக ஷியாக்கள் தானே

    இன்ஸா அல்லாஹ் எல்லாம் கோணிச்சம் கொஞ்சமாக வெளி வரும்

    ReplyDelete
  4. உண்மையை சொல்லி விட்டீர்கள் Nebosh சில மடையர்களுக்கு ஏன்தான் இன்னும் புரியாமல் இருக்கிறது??????

    ReplyDelete

Powered by Blogger.