Header Ads



பேரியல் அஷ்ரப் சந்­தே­கப்­ப­ட­வேண்­டிய, அவ­சியம் இல்லை - பஷீர்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் ஸ்தாபகத் தலைவர் அஷ்­ரபின் மரணம் தொடர்­பான எனது தேடு­தலில் பேரியல் அஷ்ரப் சந்­தே­கப்­ப­ட­வேண்­டிய அவ­சியம் இல்லை நான் அர­சி­யலில் யாருக்கும் பின்னால் போன­வ­னல்ல. அஷ்­ரபின் மரணம் தொடர்­பான எனது தேடு­த­லுக்கு பேரியல், அவ­ரது ஒரே மகன் மற்றும் குடும்­பத்தின் உத­வியை நாடி நிற்­கிறேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் முன்னாள் தவி­சா­ளரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான பஷீர் சேகு­தாவூத் தெரி­வித்தார்.  மர்ஹூம் அஷ்­ரபின் துணை­வி­யாரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான பேரியல் அஷ்ரப், தனது கண­வரின் மரண அறிக்கை விவ­காரம் தொடர்பில் ‘விடி­வெள்­ளி’க்கு தெரி­வித்த கருத்­து­க­ளுக்குப் பதி­ல­ளிக்­கை­யிலே முன்னாள் அமைச்சர் சேகு­தாவூத் இவ்­வாறு குறிப்­பிட்டார். 

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், ‘மெடம் பேரியல் அஷ்ரப் எனக்கும் மக­னுக்கும் கவ­லை­யாக இருக்­கி­றது எனத் தெரி­வித்­துள்ளார். மறைந்த தலை­வரின் மனைவி என்ற வகை­யிலும் அவ­ரது ஒரே மகன் என்ற வகை­யிலும் அவர்­களின் மன­வே­தனை மற்றும் கவ­லையை என்னால் அறிய முடி­கி­றது, உணர முடி­கி­றது, எனக்கும் கவ­லை­யாக இருக்­கி­றது. நான் மாத்­தி­ர­மல்ல முழு முஸ்லிம் சமூ­கமும் கவ­லைப்­ப­டு­கி­றது. 

மர்ஹூம் அஷ்ரப் ஒரு கண­வ­ராக, ஒரு தந்­தை­யாக இருந்­ததை விடவும் ஒரு காத்­தி­ர­மான சமூகத் தலை­வ­ரா­கவும் இருந்­துள்ளார். அதனால் அவ­ருக்கு என்ன நடந்­தது என்­பதை அறிந்­து­கொள்­வ­தற்கு சமூகம் ஏங்கிக் கொண்­டி­ருக்­கி­றது. 

17 வருட காலம் என்­பது நீண்­ட­காலம் தான். உண்­மை­யி­லேயே நீண்ட இடை­வெளி ஏற்­றுக்­கொள்­கிறேன். 

தலைவர் அஷ்ரப் 2000 ஆம் ஆண்டு செப்­டெம்பர் 16 ஆம் திகதி ஹெலி­கொப்டர் விபத்தில் கால­மானார். அதன்­பின்பு இவ்­வி­பத்து தொடர்பில் 2001 ஆம் ஆண்டு ஜன­வரி 11 ஆம் திகதி முதன் முத­லிலும் பின்பு பல தட­வை­களும் பாரா­ளு­மன்­றத்தில் கேள்­வி­யெ­ழுப்­பி­யி­ருக்­கின்றேன். விபரம் கேட்­டி­ருக்­கின்றேன். பின்பு ஒரு நீண்ட இடை­வெளி ஏற்­பட்டு விட்­டது. 


உயர்­ப­த­வியில் இருக்கும் போது மரணம் தொடர்பில் ஏன்­தே­ட­வில்லை? என மெடம் கேட்­டி­ருக்­கிறார். தலைவர் அஷ்­ரபின் மரணம் தொடர்­பான உணர்வு என்னுள் இருந்து கொண்டே இருந்­தது. உயர்­ப­த­வியில் இருக்­கும்­போதே இந்த இடை­வெ­ளி­யேற்­பட்­டது. 

இந்த விடயம் கண்­களை மறைக்­கலாம். ஆனால் கருத்­து­களை மறைக்க முடி­யாது. எனக்குள் ஓடிக்­கொண்­டி­ருக்கும் உணர்­வு­க­ளுக்கு விடை­கொ­டுப்­ப­தென்றால் அவ­ரது மர­ணத்­துக்­கான விடை­தெ­ரி­ய­வேண்டும். அவ­ரது மர­ணத்தில் சந்­தே­கப்­பட வேண்­டிய சக்தி, ஓர் உயர்ந்த சக்­தி­யாக எனக்குள் நட­மா­டிக்­கொண்டே இருக்­கி­றது. மெடம் சந்­தே­கிக்க வேண்­டிய அவ­சி­ய­மே­யில்லை. எனது தேடு­த­லுக்கு உத­வியும் ஒத்­தா­சையும் வழங்க வேண்டும். 

தற்­போது தகவல் அறியும் சட்­ட­மூலம் அமுலில் உள்­ளது. இந்த சட்­ட­மூலம் ஊடாக நாங்கள் மர்ஹூம் அஷ்­ரபின் மரணம் தொடர்­பாக அறிந்து கொள்­ளாது வேறு எதைத்தான் அறிந்­து­கொள்­வது? என்றார்.  மர்ஹூம் அஷ்ரப் 2000 ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் 16 ஆம் திகதி ஹெலி­கொப்டர் விபத்தில் மர­ண­மா­ன­தை­ய­டுத்து அப்­போ­தைய ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்­க­வினால் மரணம் தொடர்பில் ஆராய ஆணைக்­கு­ழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டது. அவ் ஆணைக்­கு­ழுவின் அறிக்கை பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. 

இந்­நி­லையில் அவ் ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையின் பிர­தி­யொன்­றினைப் பெற்­றுக்­கொள்ள தகவல் அறியும் சட்­டத்தின் ஊடாக முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அது நிராகரிக்கப்பட்டது. பின்பு தகவல் அறியும் ஆணைக்குழுவில் இது தொடர்பில் மேன்முறையீடு செய்தார் என்றாலும் குறித்த அறிக்கை தேசிய சுவடிகள் காப்பகத்திலிருந்து காணாமற் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.