Header Ads



முஸ்லிம்க­ளுக்கு நாம் அநீதி இழைக்­கப்­போ­வ­தில்லை - மாவை

தமி­ழர்­களின் தாயக பூமி­யான வடக்கு கிழக்கு இணைக்­கப்­பட்டு சமஷ்டி அடிப்­ப­டையில் உள்­ளக சுய­நிர்­ண­யத்­து­ட­னான அதி­கா­ரப்­ப­கிர்வு செய்­யப்­பட்டு நியா­ய­மான தீர்­வொன்று வழங்­கப்­ப­ட­வேண்டும். இதன்­போது முஸ்­லிம்­களும் தமி­ழர்­க­ளுடன் சகோ­த­ரர்­க­ளாக வாழும் வகை­யி­லான அவர்­களின் அபி­லா­ஷை­களை நிறை­வேற்­றக்­கூ­டி­ய­வா­றான சுயாட்சி அல­கொன்றை வழங்­கு­வ­தற்கும் தயார் என  தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் இலங்கை தமி­ழரசுக்­கட்­சியின் தலை­வ­ரு­மான மாவை.சோ.சேனா­தி­ராஜா தெரி­வித்தார்.

அர­சி­ய­ல­மைப்பு சபையில் நேற்று செவ்­வாய்­க்கி­ழமை புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான வழி­ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்கை மீதான இரண்டாம் நாள் விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் உரை­யாற்­று­கையில், 

 நாம் இணைந்த வட கிழக்கில் அதி­கா­ரங்கள் பகி­ரப்­பட்ட சமஷ்டி முறை­மையை கோரு­கின்­ற­போது தற்­போது முஸ்லிம் சகோ­த­ரர்கள் சிலர் அதனை எதிர்க்­கின்ற நிலை­மையை அவ­தா­னிக்க முடி­கின்­றது. 

கடந்த காலத்தில் பெருந்­த­லைவர் அஷ்­ர­புடன் மேற்­கொள்­ளப்­பட்ட புரிந்­து­ணர்வின் படி வட­கி­ழக்கின் பூர்­வீக சகோ­தர இனத்­த­வர்­க­ளான தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் இணைந்தே அதி­கா­ரங்­களை பகிர்ந்து கொள்­வ­தெ­னவும் விசே­ட­மாக வடக்கு கிழக்கு இணை­கின்­ற­போது முஸ்­லிம்­களின் அபி­லா­ஷை­களை பூர்த்தி செய்யும் வகை­யி­லான சுயாட்சி அல­கொன்றை வழங்­கு­வ­தற்கு நாம் தயா­ரா­கவே இருக்­கின்றோம். அது குறித்து நாம் தற்­போ­தைய தலை­மை­க­ளு­டனும் பேசு­வ­தற்கு தயா­ரா­கவே இருக்­கின்றோம்.

கிழக்கு மாகாண சபையில் நாம் கூட்­டணி ஆட்­சியை முன்­னெ­டுத்­துள்ளோம். முஸ்லிம் பிர­தி­நி­தியை முத­ல­மைச்­ச­ராக நிய­மிக்க அங்­கீ­கா­ர­ம­ளித்­துள்ளோம். ஆகவே முஸ்லிம் சகோ­த­ரர்­க­ளுக்கு நாம் அநீதி இழைக்­கப்­போ­வ­தில்லை. இணைந்த வடக்­கி­ழக்கில்  தமிழ் மக்களுக்கான அதிகாரங்களை பகிர்கின்றபோது முஸ்லிம்களின் விடயத்தினையும் நாம் கருத்தில் கொள்வோம். ஆகவே அதற்கான கலந்துரையாடல்களை இதய சுத்தியுடன் முன்னெடுப்பதற்கு அழைப்பு விடுகின்றோம் என்றார். 

8 comments:

  1. மாவை சேனாதிராசா வை முஸ்லிம்கள் நம்பலாம் நல்ல மனிதர் ஆனால் மற்றவர்கள்....

    ReplyDelete
  2. உங்களையும் சம்பந்தன் ஐயாவையும் நம்பலாம், உங்களோடு இருக்கும் மதவெறியன் யோகேஸ்வரனயயும் கிருஸ்துவ அடிப்படைவாதி சார்ள்ஸ் நிர்மலநாதனையும் எப்படி நம்புவது? என்னை பொறுத்தவரை ஈழ தமிழர்களும் நியமனவர்களும், நல்லவர்களும் அரிது

    ReplyDelete
  3. What ever your Tamils did wasn't correct since decades. why can't you point out

    ReplyDelete
  4. ஐயா!
    தனியலகு, கூட்டலகு, இணைந்தலகு எதுவுமே எமக்கு வேண்டாம். தனித்தனியே இருப்போம். இரண்டு முதலமைச்சர்கள் இருப்பது பலம் தானே. விக்கி ஐயா போல உங்களுக்கு எதிராக பல்டியடித்தாலும் மற்றையவரைக்கொண்டு சமாளிக்கலாம். கிழக்கிலும் பிள்ளையான் போல ஒரு தமிழ் முதலமைச்சரை கொண்டுவர வியூகம் அமையுங்கள். அதைவிட்டுவிட்டு என்னவழிப்பட்டும் முஸ்லிம்களை எமது ஆளுகையின் கீழ் வைத்திருக்கவேண்டும் என்ற உங்களது நரிச்சிந்தனையை கைவிடுங்கள். உங்களது உள்நோக்கம் அறிக்கைகளில் தவறியேனும் வெளிவந்துவிடுகிறது.

    ReplyDelete
  5. ஐயா மாவை சேனாதிராஜா அவர்களே,

    நல்ல சிறப்பான உரை மற்றும் சிந்தனை, அனால் வடக்கும் கிழக்கும் இணைந்து இருந்த பொழுது நீங்கள் இவ்வாறு எந்த சந்தர்ப்பத்திலும் பேச வில்லையே ஐயா?????

    எமது அனுமதி இல்லாது வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்ட பொழுது செய்வதறியாது எமது சமூகமும் எமது தலைமைகளும் சிந்தித்த பொழுது, வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட வாய்ய்பு இல்லை என்பதை உணர்ந்த சந்தர்ப்பத்தில் எம் தலைவர் அஷ்ரப் அவர்களால் முன் வைக்கப்பட்ட யோசனைதான் அது (நடைமுறை சாத்தியம் இல்லை என்று தெரிந்திருந்தும்). அந்த யோசனை வடகிழக்கை நிரந்தரமாக இணையாமல் தடுத்தது. ஈற்றில் வடக்கும் கிழக்கும் பிரிந்தது.
    அனால் அன்று அந்த யோசனைக்கு பெயரளவிலேனும் ஆதரவளிக்க நீங்கள் யாரும் முன் வரவில்லை.

    ஆனால் இன்று நிலைமை வேறு, வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்டு விட்டது. இப்பொழுது இந்த யோசனை எமக்கு தேவையில்லை. ஆனால் நீங்கள் அதை கையில் எடுத்துள்ளது அரசியல் தந்திரம் அல்லாது வேறொன்றும் இல்லை. வடகிழக்கை பிரிக்க எம் தலைமை உபயோகித்த யுக்தியை மீண்டும் வடகிழக்கை இணைக்க நீர் பயன்படுத்த முனைவதுதான் அரசியல்.

    இந்நாட்களில் முஸ்லிம்களின் சுயாட்சியை பற்றி தமிழ் தலைமைகள்தான் அதிகம் கவலைப்படுகின்றனர். எமக்கு ஒரு சுயாட்சி தேவையில்லை ஐயா, அது சாத்தியமில்லை என்பது உமக்கு தெரியாமலும் இல்லை.

    வடகிழக்கிட்கு வெளியில் எம் சமூகத்தின் 2/3 பகுதியினர் வாழும் போது, 1/3 பங்கு நாங்கள் மாத்திரம் சுயாட்சி கேட்பது எதட்காக?

    சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் 7 மாகாணங்கள் இருக்கும்பொழுது தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியில் 2 மாகாணங்கள் இருப்பதில் என்ன தவறு இருக்கின்றது?

    ஈற்றில் ஒரு விடயம் மாத்திரம் ஐயா,
    தமிழர்களை நம்புவதட்கு முஸ்லிம்களிடம் ஒரு நியாயமான காரணங்களும் கிடையாது ஐயா, அனால் நம்பாமல் இருப்பதட்கு பல நூறு கழுத்தறுப்புகளும் காட்டிக்கொடுப்புகளும் அவலங்களும் காரணங்களாக உள்ளன ஐயா....

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அருமை அருமை அருமை

      Delete
  6. Super! very exactly said bro. Abdul... we can trust enemy.. not hypocrisy!

    ReplyDelete
  7. Could you able present your justification implemented for Muslims with supportive documents. Past records may review you word worthwhile.

    ReplyDelete

Powered by Blogger.