Header Ads



ராஜபக்ஷக்களின் குற்றங்கள் பற்றி, ஏன் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை

சட்டமா அதிபரினால் பிரதமர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமை நல்லாட்சி மற்றும் தீய ஆட்சிக்கு இடையிலான வித்தியாசத்தை புரித்து கொள்வற்கான சந்தர்ப்பமாக அமைந்துள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மாத்தரையில் நேற்று இடம்பெற்ற சத்தியாகிரக போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

கடந்த ஆட்சியில் சட்டமா அதிபர்களுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்கள் குறித்து மக்கள் தெளிவாக அறிந்து வைத்துள்ளதாக அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

முன்னாள் சட்டமா அதிபர் மோஹான் பீரீஸ் மெதமுலனையில், உள்ளவர்களுக்கு சேவைப்புரியும் நிலை இருந்தது.

இதேவேளை, முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவுக்கு ஏற்பட்ட நிலையை மக்கள் அறிவர்.

எனினும் இந்த நிலை தற்போது மாறியுள்ளது.

பிரதமர் சட்டமா அதிபரிடம் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னிலையாகியிருந்தார்.

இதுசட்டத்தின் நடைமுறை மீதான நல்லெண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், ராஜபக்ஷக்களின் குற்றங்கள் தொடர்பில் ஏன் இதுவரை சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என கேள்வி எழுப்பியுள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 

மத்திய வங்கியின் முறி மோசடி தொடர்பில் காட்டப்படுகின்ற, ஆர்வம் மகிந்த ராஜபக்ஷவின் மோசடிகள் தொடர்பில் ஏன் ஏற்படுவதில்லை என்ற கேள்வி எழுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.