Header Ads



விஹாரையில் மன ஆற்றுப்படுத்தலை, செய்த பெண் கைது

சீகிரிய பகுதியில் அரச வேலை வாய்பை பெற்றுத் தருவதாக கூறி நிதி மோசடி செய்த பெண் ஒருவரை, மக்கள் பொலிஸாரிடம் பிடித்துக் கொடுத்துள்ளனர். 

சந்தேகநபர் மாதக் கணக்கில் சீகிரிய பகுதி விஹாரை ஒன்றில் மக்களின் மன ரீதியான ஆற்றுப்படுத்தல்கள் குறித்த விளக்கங்களை வழங்குபவராக செயற்பட்டுள்ளதாக தெரிகிறது. 

பின்னர் வங்கி உள்ளிட்ட அரச நிறுவனங்களில் வேலை பெற்றுத் தருவதாக கூறி, அவர், அப் பகுதி மக்களிடம் இருந்து பாரிய நிதியை திரட்டிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார். 

இதனையடுத்து, வேறு சிலரை வேலை தேடுபவர்கள் போல ஏற்பாடு செய்த அப் பகுதி மக்கள், சந்தேகநபரை பிடிக்க சூட்சமமான முறையில் திட்டமிட்டுள்ளனர். 

இந்தநிலையில், அவர்களிடம் பணத்தைப் பெற மீண்டும் சீகிரிய பகுதிக்கு வந்தவேளை, குறித்த பெண்ணை மடக்கிப் பிடித்த மக்கள் பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். 

மேலும், கைதுசெய்யப்பட்டவர் கண்டியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. 

இவர் வேலை வாய்ப்பை பெற்றுத் தருவதாக கூறி, பலரிடம் இருந்து, 25,000 ரூபா முதல் 2 இலட்சம் ரூபா வரை பணத்தைப் பெற்றுக் கொண்டுள்ளதாக, பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது. 

இதுஇவ்வாறு இருக்க, சந்தேகநபர், மேலும் சிலருடன் இணைந்து நாட்டின் பல பாகங்களிலும் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டுள்ளமை, பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

சந்தேகநபரை இன்று தம்புள்ளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சீகிரிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

No comments

Powered by Blogger.