Header Ads



மரண தண்டனைக்கு எதிரான, துமிந்தவின் முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலைச் சம்பவம் தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட 5 பேர் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றம் குறித்த மனுவை இன்று ஆராய்ந்த போதே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதுடன், இதனடிப்படையில் மனு மீதான விசாரணை எதிர்வரும் மார்ச் 29ஆம் திகதி நடைபெறவுள்ளது.

2011ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கிற்கு 5 வருடங்களுக்குப் பிறகு கடந்த வருடம் (2016) செப்டெம்பர் மாதம் 08ஆம் திகதி இறுதி தீர்ப்பு வெளியாகியிருந்தது.

இதன்படி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட ஐவருக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

இந்த தண்டனையை எதிர்த்து துமிந்த சில்வா உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.