Header Ads



பிரதமரை நீக்க முயற்சியா? ஜனாதிபதியின் பதில் இதோ..!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தனக்குமிடையே எவ்வித முரண்பாடும் கிடையாது என்றும், தேசிய அரசின் பயணத்தைத் தடுப்பதற்காகவே இவ்வாறான கருத்துகள் பரப்பப்படுகின்றன என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசியக்கட்சியின் பின்வரிசை எம்.பிக்களுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று  நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.

இதன்போது, ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி முயற்சிக்கின்றார் என்று ஊடகங்களில் வெளியான செய்திகளைக் கோடிகாட்டி ஐ.தே.க. எம்.பிக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் என அறியமுடிகின்றது.

'பிரதமருக்கும், எனக்குமிடையே எவ்வித முரண்பாடும் இல்லை. வெளிப்படையாகவே பேசி பிரச்சினைகளைத் தீர்த்துவருகின்றோம். அரசைக் குழப்பும் வகையிலேயே இவ்வாறான கருத்துகள் வெளியிடப்படுகின்றன. இதை நம்பவேண்டாம். பிரதமருக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நெருக்கடி கொடுக்க விடமாட்டேன்" - என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்..

No comments

Powered by Blogger.