Header Ads



மைத்திரிபாலவின் கூட்டத்திற்கு, கடலை நீந்தி கடந்துவந்த மக்கள்

கிண்ணியாவில் 2015ஆம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கூட்டத்திற்கு மக்கள் கடலை நீந்திக் கடந்து வந்து கலந்து கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற 2018ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கூறுகையில், 

நாட்டின் கடன் சுமை தாங்க முடியாத அளவிற்கு அதிகரித்து விட்டது. கடன் மட்டுமல்ல அதற்கான வட்டியும் செலுத்த வேண்டியதாக உள்ளது.

1948ஆம் ஆண்டு நாம் எப்படி ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் பெற்றோமோ அதே போல கடன் சுமையிலிருந்து மீண்டு ஒரு புதிய சுதந்திரத்தை பெற வேண்டிய கட்டாய நிலையில் நாம் இருக்கின்றோம்.

பல நல்ல விடயங்கள் இந்த வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தும் கூட பல விமர்சனங்கள் எழுப்பப்படுகின்றன.

சென்ற ஜனாதிபதித் தேர்தல் காலத்திலே எங்களுடைய கிண்ணியா பிரதேசத்தில் தேர்தல் பிரச்சார பணிகளுக்கு மைத்திரிபால சிறிசேன வந்திருந்த போது அங்கு மக்கள் எதிர்நோக்கிய ஒரு பாரிய பிரச்சினையாக கிண்ணியா, குறிஞ்சன்பள்ளி பாலம் அமைந்திருந்தது.

ஜனாதிபதி அப்போது அந்த இடத்திலே கூட்டமொன்றை நடத்தியபோது மக்கள் தோணிகளிலும், சில மக்கள் அந்த கடலை நீந்தி கடந்து வந்தும் கலந்து கொண்டார்கள்.
இப்போது எதிர்காலத்தில் அந்த பாலம் புனரமைக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. ஆனால் அதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.