Header Ads



கொழும்பில் திறக்கப்பட்டது ஷங்ரிலா


கொழும்பு நகரத்திற்கு வரும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வசதிகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில் காலி முகத்திடலுக்கு எதிரே நிர்மாணிக்கப்பட்டுள்ள ஷங்ரிலா ஹோட்டல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பிரமுகர்களால் இன்று (16) திறந்து வைக்கப்பட்டது.

உலகளாவிய ரீதியில் ஷங்ரிலா ஹோட்டல் குழுமத்திற்குச் சொந்தமான 101 ஆவது ஹோட்டலாக கொழும்பு ஷங்ரிலா ஹோட்டல் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதி நவீன வசதிகளைக்கொண்ட இந்த ஹோட்டல் 41 விசேட தங்கும் விடுதிகள், 34 சொகுசு அறைகள் உட்பட 541 அறைகளை கொண்டுள்ளது.

ஹோட்டலின் நினைவுப் பலகையைத் திரை நீக்கம் செய்து வைத்த ஜனாதிபதி, அங்கு வைக்கப்பட்டிருந்த விசேட விருந்தினர் புத்தகத்திலும் நினைவுக் குறிப்பொன்றைப் பதிவு செய்ததுடன், 32 ஆவது மாடியிலுள்ள காட்சிக்கூடத்திலிருந்து சுற்றுச்சூழலைப் பார்வையிட்டார்.

ஷங்ரிலா ஆசியா நிறுவனத்தின் தலைவர் Hui kuok ஜனாதிபதிக்கு விசேட நினைவுச் சின்னமொன்றை வழங்கினார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான ஜோன் அமரதுங்க, மங்கள சமரவீர, கபீர் ஹசீம், சஜித் பிரேமதாச, சம்பிக்க ரணவக, ஜோன் அமரதுங்க, பைசர் முஸ்தபா, ஷங்ரிலா ஆசிய பிரதம நிறைவேற்று அதிகாரி Lim Beng Chee, ஸ்ரீ லங்கா ஹோட்டல் குழுமத்தின் பணிப்பாளர் Sajjad Mawzoon ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

2 comments:

  1. Also thief RAVI behind.. Oraa Still in power. One Very Shame LK politics.

    ReplyDelete
  2. hotel opened. good. where can they find guests ?

    ReplyDelete

Powered by Blogger.