Header Ads



புத்தரின் உருவத்தை பச்சை குத்திய, பெண்ணுக்கு நட்டஈடு

தனது வலது கையில் புத்தரின் உருவத்தை பச்சைக் குத்தியிருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு  கடத்தப்பட்ட பிரித்தானிய பெண்ணினது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும், இதற்காக அரசு 5 இலட்ச ரூபாவினை நட்ட ஈடாக செலுத்த வேண்டுமெனவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (15) தீர்ப்பளித்தது.

அத்துடன் குறித்த பிரித்தானிய பெண்ணைக் கைது செய்த பொலிஸார் இருவரும் தலா 50,000 ரூபாவினை   குறித்த பெண்ணுக்கு நட்டஈடாக செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு வருகைத் தந்த குறித்த பெண்ணின் வலக்கையில் புத்தரின் உருவம் பச்சைக் குத்தப்பட்டிருப்பதாக தெரிவித்து அவர் கைதுசெய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டிருந்தார்.

பௌத்த மதத்தின் மீது தனக்குள்ள கௌரவம்,மரியாதைக் காரணமாகவே தான் இவ்வாறு பச்சைக் குத்தியதாகவும் அந்தப் பெண் தெரிவித்திருந்தார்.

 குறித்த சம்பவம் மூலம் தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக தெரிவித்து கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் இருவர்  குடிவரவு-குடியகல்வு அதிகாரிகள் மற்றும் நீதிபதி ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டு குறித்த பெண் மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. Very good and goverment should pay her at least one millioons more.

    ReplyDelete

Powered by Blogger.