Header Ads



ஜிந்தோட்டையில் நடந்தது, மூர்க்கத்தனம் - புஜித ஜயசுந்தர

கிந்தொட்ட பிரதேசத்தில் கலவரம் ஒன்று ஏற்பட்டது என்பதற்கு சமூகத்தில் இயங்குகின்ற சிங்கள-முஸ்லிம்  அமைப்புக்கள் அனைத்தும் பொறுப்புச் சொல்ல வேண்டும் எனவும், அவ்வாறான அமைப்புக்கள் சகலவற்றினதும் தோல்வியையே இக்கலவரம் எடுத்துக் காட்டுவதாகவும் பொலிஸ் மா அதிபர் புஜித ஜயசுந்தர தெரிவித்தார்.

காலியில் இடம்பெற்ற சமூக அமைப்புக்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு கிந்தொட்ட நிகழ்வு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே பொலிஸ் மா அதிபர் இதனைக் கூறினார்.

இந்த தோல்வியில் பொலிஸார், எஸ்.ரி.எப்., கிராம சேவைப் பிரிவுகள், பொலிஸ் ஆலோசனைக் குழு, சமயத் தலைவர்கள் உட்பட பல அமைப்புக்களும் உள்ளடங்குகின்றனர். உண்மையை நாம் மறைக்காமல் கூறுவோம்.

இவை அனைத்தும் மனித நேயமற்ற மூர்க்கத்தனத்தின் விளைவுகளேயாகும் என்று கூற வேண்டியுள்ளது எனவும் பொலிஸ் மா அதிபர் தனதுரையில் மேலும் குறிப்பிட்டார். 

1 comment:

  1. அப்டிச் சொல்லிப்போட்டு............. இன்னொரு அழிவுக்காகக் காத்துக்கொன்டிருகப் போகிறீர்களா பொலிஸ்மா அதிபரே ..........

    ReplyDelete

Powered by Blogger.